'நான்சென்ஸ்' எனத் திட்டிய கல்வி அதிகாரி!-''மாநில அளவில் கல்வித் துறை உயர் அதிகாரி மேலே, சி.இ.ஓ.,க்கள் கடும் அதிருப்தியில் இருக்கா ஓய்...'' என, கடைசி தகவலுக்கு மாறினார் குப்பண்ணா.
''என்ன பிரச்னை வே...'' எனக் கேட்டார் அண்ணாச்சி.
''பொதுத் தேர்வுல, பாஸ் பர்சன்டேஜை கூட்டணும்ன்னு சொல்றதுக்காக, அமைச்சர், செயலர் பங்கேற்ற சென்னைல ஆய்வுக் கூட்டம் நடந்துது... அதுல கலந்துண்ட, பெண் சி.இ.ஓ., ஒருத்தரை, ஒரு உயர் அதிகாரி, 'நான்சென்ஸ்'ன்னு வெளிப்படையா திட்டிட்டார்... அந்தம்மாவுக்கு, 'குப்'புன்னு அழுகை வந்துடுத்து... அவமானம் தாங்கலே...
''கூட்டம் முடிஞ்சப்பறமா, மத்த அதிகாரிகள்லாம், அந்த சி.இ.ஓ.,வை சமாதானம் செஞ்சு அனுப்பி வச்சிருக்கா...'' என்றார் குப்பண்ணா.
''க்ளூ ஏதாவது குடுக்கீரா...'' என்றார் அண்ணாச்சி.
''வேண்டாமே... திட்டினவாளோட மனசாட்சிக்கு தெரியட்டும், பத்து பேர் முன்னிலைல அப்படி திட்டினது தப்புன்னு...'' என்றார் குப்பண்ணா.
1 comment:
என்ன ஓய்.....வெளிப்படையாய் பேசும்
Post a Comment