Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Sunday, March 15, 2015

    அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு 'ஸ்போக்கன் இங்கிலிஷ்' பயிற்சி

    தனியார் பள்ளிகளுக்கு இணையாக, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலம் பேசக் கற்றுக் கொடுக்க, ஒன்று, இரண்டாம் வகுப்பு ஆசிரியர்களுக்கு 'ஸ்போக்கன் இங்கிலிஷ்' வகுப்பு வரும் 16ம் தேதி நடத்தப்படுகிறது.

    ஆங்கில மோகத்தின் காரணத்தால், பெரும்பாலான பெற்றோர் ஆங்கில வழிக் கல்வி தரும், தனியார் மெட்ரிக் பள்ளிகளில், குழந்தைகளை சேர்க்கின்றனர். இதனால், அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து சரிவை சந்திக்கிறது.இதையடுத்து, தனியார் பள்ளிகளுக்கு இணையாக, அரசு பள்ளிகளிலும் மாணவ, மாணவியருக்கு ஆங்கிலம் எழுதவும், பேசவும் கற்றுக் கொடுக்க கல்வித்துறை முயற்சித்து வருகிறது.இந்த வரிசையில் மத்திய அரசின் அனைவருக்கும் கல்வி இயக்க (சர்வ சிக்ச அபியான்) திட்டத்தில், ஆசிரியர்களுக்கு சிறப்பு ஆங்கிலப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
    இதன்படி, அரசுப் பள்ளிகளின் ஒன்றாம், இரண்டாம் வகுப்பு ஆசிரியர்களுக்கு, வரும் 16, 17ம் தேதிகளில் முதற்கட்டமாகவும், 19, 20ம் தேதிகளில் இரண்டாம் கட்டமாகவும் ஆங்கிலப்பேச்சு (ஸ்போக்கன் இங்கிலிஷ்) பயிற்சி அளிக்கப்படுகிறது.இப்பயிற்சியில், அனைத்து ஆரம்பப் பள்ளிகளின் ஆசிரியர்களும் பங்கேற்க, அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். ஆசிரியர்களுக்குப் பேச்சுப் பயிற்சி, மாணவர்களுக்கு அளிக்க வேண்டியபயிற்சியுடன், ஆங்கிலப் பேச்சுக்கான 'சிடி'யும் வழங்கப்பட உள்ளது.

    No comments: