Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
 • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
 • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

  Thursday, March 5, 2015

  பொதுத்தேர்வு: செய்ய வேண்டியதும், செய்யக் கூடாததும்

  தேர்வு எனும் போது உடல், உள்ளம், ஆன்மா மற்றும் இதயம் ஒரு நேர்கோட்டில் இணைய வேண்டும். அமைதியாக இருப்பதில் நன்மையே.

  நல்ல பாடல் கேட்பது, நிறைய நீர் குடிப்பது, மீன் தொட்டிகளை உற்று நோக்குவது, பிடித்த நாய் அல்லது முயல் என்ற வீட்டுப் பிராணியுடன் சற்றுப் பொழுது கழிப்பது எல்லாமே மிக சரியான வழி தான். 


  படிக்கும் முறை

  படிக்கும் போது சின்ன சின்ன இடைவெளி விடுதல் வேண்டும். தொடர்ந்து 40 அல்லது 45 நிமிடம் படிக்கலாம். படிக்கும் போது உட்காரும் பாங்கு எனப்படும் ‘போஸ்ச்சர்’ மிக முக்கியம். நேராக அமர்ந்து விளக்கு வெளிச்சம் இடது பக்கத்திலிருந்து வருவது நல்லது. படுத்துக் கொண்டு படித்தல், படுக்கை அறையில் படித்தல், பேசிக் கொண்டே படித்தல், டிவி பார்த்துக் கொண்டே படித்தல் அறவே கூடாது.

  பாட்டு கேட்டுக் கொண்டே படிப்பது பள்ளி இறுதித் தேர்வுக்கு உகந்தது அல்ல. தலையணையை மடியில் வைத்து படிப்பதும் வேண்டாம். தலையணையை பார்த்தாலே மூளைக்கு தூக்கம் நினைவுக்கு வரும். ஆகவே படிக்கும் சூழல், அமரும் பாங்கு முக்கியம். தலை மேலாக இருந்தால் தான் ரத்த ஓட்டம் சரியாக இருக்கும். அவ்வப்போது எழுந்து நடந்து முகம் கழுவி ‘ப்ரெஷ்’ ஆகலாம்.

  நினைவாற்றல்

  நினைவாற்றலை பரிசோதிக்க படித்ததை சொல்லிப் பார்க்க வேண்டும். புரிந்ததா என்று சுய ஆய்வு செய்து பார்த்த பிறகு, புத்தகத்தை திருப்பிப் பார்க்கலாம். கவன சிதறல் இல்லாது படித்தல், நினைவில் கொள்ளுதல், நினைவில் உள்ளதை தேர்வில் சரியாக வெளிப்படுத்தி அழகாக எழுதுதல் மிக முக்கியம்.

  குறைந்தது ஆறு மணி நேரத் தூக்கம் அவசியம். மூளை சரியாக வேலை செய்ய தண்ணீர், ஆக்சிஜென் தான் தேவை.  எனவே மூச்சுப் பயிற்சி செய்வது நல்லது. 

  முக்கியமாக தேர்வு அட்டவணையை அலமாரியில் அல்லது படிக்கும் அறையில் ஒட்டி வைப்பது எதற்கு என்றால் தேர்வினை மாற்றிப் படித்து விட்டால் ஆபத்தாகி விடும் என்பதால் தான்.

  தேர்வு நடைபெறும் இடத்திற்கு அரை மணி நேரம் முன்பே சென்று அடைதல் நல்லது. தேர்வு தொடங்கும் முன்பு மனதை அமைதியாக வைத்திருத்தல், மூச்சுப் பயிற்சி செய்தல், கடவுள் நம்பிக்கை இருந்தால் துதிகள் சொல்லுதல் நல்ல விஷயம் தான்.

  தேர்வு விதிமுறைகள்

  என்ன செய்யலாம் என்ன செய்யக் கூடாது என்கிற சில விதிமுறைகள் தேர்வு ஆணையம் நிர்ணயம் செய்துள்ளது என்பதை மாணவர்கள் புரிந்து கருத்தில் கொள்ள வேண்டும். முக்கியமாக எல்லா தேர்வுகளுக்கும் சீருடையில் தான் போக வேண்டும்.

  ஹால் டிக்கெட், இரண்டு பௌன்டைன் அல்லது ஜெல் பேனா - நீல வண்ணம், நீள ஸ்கேல், கூர் சீவப்பட்ட பென்சில் இரண்டு, கூர் செய்ய ஷார்பெனெர், இங்க் அழிக்கும் எரேசர், பென்சில் அழிக்கும் எரேசர் மறக்காமல் கொண்டு செல்ல வேண்டும். மொபைல் போன் கண்டிப்பாக கொண்டு போகக் கூடாது. விலை உயர்ந்த கைக்கடிகாரம், நகைகள் அணிதல் தவிர்க்க வேண்டும்.

  தேர்வு அறையில் செய்யக்கூடாதது:  அக்கம் பக்கம் திரும்புதல், யாரிடமும் எந்த பொருளும் கேட்டு வாங்குதல், பதிவு எண் போட்ட சீட் தவிர வேறு இடம் நகர்தல், கேள்வித்தாள் பெற்றுக் கொண்ட பிறகு நண்பர்களிடம் திரும்பி செய்கை காட்டுதல், விவாதம் செய்தல், சந்தேகம் கேட்டல் இவை எல்லாம் நிச்சயம் கூடாது.

  விடைத்தாளின் முதல் பக்கம் மிக கவனமாக எழுதுதல் முக்கியம். விடைத்தாளில் எந்த இடத்திலும் பெயர் எழுதுதல் கூடாது. கேள்வித்தாளில் எதுவும் எழுதக் கூடாது. அப்படி எழுதுதல் ஐந்து வருடங்களுக்கு தேர்வு எழுத முடியாத அளவிற்கு தண்டனை பெற்றுத் தரலாம்.

  எப்படி வாசிப்பது? 

  சிலருக்கு இரவெல்லாம் படிக்கும் பழக்கம் இருக்கும். சிலருக்கு விடிய விடிய படிக்கும் பழக்கம். சிலருக்கு விடியற்காலை எழுந்து படிக்கும் பழக்கம் இருக்கும். சிலர் சத்தமாக வாசிப்பர். சிலர் படித்து படித்து மனப்பாடம் செய்வர். இருந்தாலும் அதிக நேரம் விழித்திருக்கும் பழக்கம் தூக்கத்தை கெடுக்கும். காலையில் பித்தம் அல்லது உடல் சூடு காரணமாக வாந்தி வயற்றுப் பிரட்டல் ஏற்படலாம். சிலருக்கு மலச்சிக்கல் உண்டாகலாம். அதனால் நிறைய தண்ணீர் குடித்தல் மிக அவசியம்.

  காலையில் எழுந்தவுடன் சின்ன சின்ன உடல் பயிற்சி உடலின் அத்தனை செல்களையும் விழித்து எழச் செய்யும். 

  ஒரு தேர்வுக்கும் அடுத்த தேர்வுக்கும் இடையில் ஒரு நாள் விடுமுறை இருந்தால் அந்த நாளை மிகச் சிறப்பாக பயன்படுத்த வேண்டும். பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று தள்ளிப் போட்டால் மன அழுத்தம் தான் உண்டாகும். திடீர் என்று மின்தடை ஏற்படலாம். எனவே எமெர்ஜென்சி விளக்கு அல்லது மெழுகுவர்த்தி வைத்துக் கொள்வது நிச்சயம் நல்லது.

  தியாகம்

  சேர்ந்து படிக்கிறேன் என்று நண்பர்களுடன் பேசிப் பொழுதைக் கழிப்பது நல்லதல்ல. நண்பர்கள் இதைப் படி அதைப்படி என்று சொல்லுவதும், இதைப் படிக்க வில்லையா என்று பயமுறுத்துவதும் மிக மிக சாதரணமாக நடக்கும் ஒன்று தான். அதற்கு சோடைபோய் விடக்கூடாது.

  தேர்வு சமயம் டிவியில் எப்போதும் பார்க்கும் நிகழ்ச்சி இருக்கலாம். அல்லது கிரிக்கெட் போன்ற போட்டி நடைபெறலாம். சிறு தியாகங்கள் பெரிய பலன்களை கொணர்ந்து சேர்க்கும்.

  பெற்றோரும், குடும்பத்தாரும் கூட டிவி, இன்டர்நெட், மொபைல் இவற்றை கொண்டு மாணவர்களை கவனச் சிதறல் இல்லாது.

  முக்கிய ‘டிப்ஸ்’

  எல்லா தேர்விலும் மிகச் சரியாக, மிக நன்றாக தெரிந்த விடைகளை எடுத்தவுடன் எழுதுவது நல்லது. தெரியாத அல்லது கடினமான வினாக்களை கடைசியில் முயற்சி செய்யலாம். 

  விடைத்தாளில் சரியான கேள்வி எண்ணை மார்ஜினில் எழுத வேண்டும். மதிப்பீடு செய்யும் ஆசிரியருக்கு குழப்பம் வராத வண்ணம் தெளிவாக இருத்தல் வேண்டும். 

  அந்த நாள் தேர்வு முடிந்து விட்டது என்றால் நடந்து முடிந்த தேர்வு பற்றி அதிகம் பேசுதல், யோசித்தல், பெற்றோர் அல்லது நண்பர்களுடன் விவாதித்தல் ஆகியவை மனதை மிகவும் பலவீனமாக ஆக்கிவிடும். அடுத்த தேர்வினைப் பற்றி யோசித்தல், திட்டமிடுதல், தயார் செய்தல் வேண்டும்.

  - டாக்டர் பாலசாண்டில்யன்
  (கல்வியாளர், உளவியல் ஆலோசகர்)

  No comments: