Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, March 3, 2015

    மாற்றம் காணும் மார்ச் 8;- முத்துப்பாண்டியன்

    மாற்றம் காணும் மார்ச் 8 இனிய தோழனே!

    ஒவ்வொரு போராட்ட காலத்திலும் உன்னை உரிமையோடு போராட்ட களத்திற்கு அழைப்பதை வாடிக்கையாக கொண்டள்ளேன். நீயும் உணர்வோட அதில் கலந்துள்ளாய். தனிச்சங்க நடவடிக்கையில் கூட உன் வரவு வட்டார, மாவட்ட, மாநிலத்தையே திரும்பி பார்க்க வைத்தது.
    ஆனால் ஒரு கை ஓசை என்பது ஆட்சியாளர்களின் உள்ளத்தை உருத்த வில்லை என்பதை உணர்ந்ததான் ஒரு கூட்டுப் போராட்டத்திற்கு நாம் கூப்பாடு போட்டோம். 


    நமது ஓலம் சகோதர சங்கங்களின் நித்திரையை கலைத்து இன்று ஜாக்டோ என்ற பதாகையின் கீழ் சங்கமித்துள்ளோம். டிட்டோஜாக்கி்ல் எந்த நம்பிக்கையின் அடிப்படையில் இறுதி கட்ட போர் வரை போராடினாயோ!!! அதை விட அசுர பலத்துடன் போராட தயாராகி விடு. நீ மட்டுமல்ல உன்னோடு பணியாற்றும் சக ஆசரியர்களையும் அழைத்து வா.

    கடந்த ஆண்டு ஆகஸ்ட் -30 எப்படி மாவட்ட நிர்வாகத்தை ஸ்தம்பிக்க வைத்தாயோ அதை போல அனைத்து இயக்க தோழர்களுடன் வருகிற 8ந் தெதி மாவட்ட பேரணியால் கதி கலங்க வைக்க வேண்டும். இடைநிலை ஆசிரியரின் ஊதிய மாற்றம் என்ற வாழ்வாதர கோரிக்கையே நம் மைய புள்ளி. இந்த இறுதி போரில் எந்த விலை கொடுத்தாவது இழந்த உரிமையை மீட்டெடுக்க வேண்டும். மார்ச-8 என்பது என் வாழ்வில் மாற்றம் காணப்போகும் மகத்தான நாள். நீ அழைக்கும் ஆசிரிய சகோதரிகளுக்கு அன்றுதான் நீ கேள்வி படாத காரணங்கள் வந்து போகும். இதில் வர இயலாமைக்கு அவர்கள் கூறும் காரணங்களை ஒவ்வொரு போராட்ட காலத்திலும் கேட்டு பழகிவிட்டதால் உனக்கு அதை எப்படி சமாளித்து அவர்களை போராட்ட களத்திற்கு அழைக்கும் சூட்சமம் அறிந்திருப்பாய். அளவு மாற்றம்தான் ஆட்சியாளர்களின் மனமாற்றத்திற்கு அடி கோலும் என்பதால் பங்கேற்பாளர்களின் எண்ணிக்கையை உயர்த்த கடுமையாக களப்பணியாற்று. போராட்ட குணம் நமது பிறப்பிலேயே இருப்பதால் உனக்கு அதைப்பற்றி அதிகம் விளக்க வேண்டிய அவசியமல்லை. போராட்ட காலத்தில் அடிக்கடி உன்னோடு முன நூலில் உரையாட இயலவில்லையென்றாலும் நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் உரையாடவே விரும்புகிறேன். தோழனே இந்த போராட்டத்தில் புதிதாக பணியேற்ற ஆசிரியர்களை அதிகம் பங்கெடுக்க முயற்சி செய். ஆசிரியர் சந்திப்பு அடிக்கடி நிகழட்டும். தோழமைகளோடு திட்டங்கள் தீட்டுங்கள். எப்படி, எந்த வாகனங்களில் ஆசிரியர்களை அழைத்துச் செல்வது என்பது இறுதி முடிவாக்குங்கள். உறக்கம் வேண்டாம். வருங்கால சந்ததிக்கு நாம் தரப்போகும் வெற்றி பரிசை பெறுவதற்கு வா இணைந்து களம் காண்போம்.
    ஜிந்தாபாத்! ஜாக்டோ ஜிந்தாபாத்!!!!
    உன் வரவை ஆவலுடன் எதிர் நோக்கி....
    தேழமையுடன்....
    முத்துப்பாண்டியன்.ஆ
    மாவட்டச்செயலாளர்
    TNPTF@sivaganga.

    No comments: