"பிளஸ் 2 ஆங்கிலம் முதல் தாளில் எதிர்பார்த்த வினாக்கள் இடம் பெற்றதால் அதிக மதிப்பெண்கள் அள்ளலாம்" என மாணவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து மதுரையில் மாணவர்கள் கூறியதாவது: ரூபன், அமெரிக்கன் கல்லூரி மேல்நிலைப் பள்ளி: பொருள் தருக, எதிர்ச்சொல் பகுதியில் இரண்டு வார்த்தைகள் தவிர பிற அனைத்தும் 'புக்பேக்'கில் இருந்தே இடம் பெற்றன. இலக்கண பிரிவில் ஒருசில வார்த்தை கடினமாக அமைந்தன.
நெடுவினாவில் முதல் இரண்டு பாடங்களில் ஒன்று கேட்கப்பட்டது மகிழ்ச்சி. சாருமதி, எம்.ஆர்.ஆர்.எம்.ஏ.வி.எம்.எம்., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி: ஒரு மதிப்பெண் பகுதியில் 40 கேள்விகள் 'புக்பேக்'கில் தான் கேட்கப்பட்டன. சொந்த நடையில் எழுதும் பகுதி எளிய வார்த்தைகளால் அமைந்தன. இலக்கணம், செய்யுள் உட்பட பெரும்பாலான பகுதிகள் அடிக்கடி எழுதிப்பார்த்து பயிற்சி பெற்றவையாக இருந்தன.
ஜோதிமலர், எஸ்.பி.ஓ.ஏ., மெட்ரிக் பள்ளி, நாகமலை: செய்யுள் இலக்கணம் மற்றும் 'பாராகிராப்' பகுதி மிக எளிய நடையில் இருந்தது. 'இடம் சுட்டி பொருள் விளக்கு' பகுதியும் எளிதாக இருந்தது. ஐந்து ஆண்டுகள் அரசு பொதுத் தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள் அதிகம் இடம் பெற்றன. 90 மதிப்பெண்ணுக்கு மேல் எளிதில் பெறலாம். ஆசிரியர் ரமேஷ், விருதுநகர் இந்து நாடார் மேல்நிலைப் பள்ளி: ஒருமை, பன்மை பகுதியில் ஒருசில வார்த்தைகள் கிராம மாணவர்களை திணறடித்தது. இலக்கண பகுதியில் 16 மதிப்பெண்கள் கிராம மாணவர்களும் எளிதாக பெறலாம். நெடுவினாவில் கேட்கப்பட்ட 2, 4, 6 பாடங்கள் சாதாரணமாக படிக்கும் மாணவர்களும் படித்தவையாக இருந்தன. செய்யுள் பகுதி 'பாராகிராப்' கேள்விகளும் அடிக்கடி மாணவர்கள் எழுதி பயற்சி பெற்ற பகுதியில் இருந்து தான் கேட்கப்பட்டன. நெடுவினாவில் எதிர்பார்த்த 'ஜூலியட் ஜீசர்' இடம் பெற்றது. அதிக மதிப்பெண் எளிதில் பெறலாம்.
No comments:
Post a Comment