Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Wednesday, March 4, 2015

    பிளஸ் 2 பொதுத்தேர்வு நாளை துவக்கம் : 8.43 லட்சம் பேர் எழுதுகின்றனர்

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில், நாளை, பிளஸ் 2 பொதுத்தேர்வு துவங்குகிறது. 8.5 லட்சம் மாணவ, மாணவியர் பங்கேற்கும் இத்தேர்வில், முறைகேடுகளைத் தடுக்க, கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. தனியார் பள்ளிகளை தீவிரமாக கண்காணிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

    பிளஸ் 2 பொதுத்தேர்வு நாளை துவங்கி, வரும் 31ம் தேதி முடிகிறது.
    * நாளை, தமிழ் முதல் தாள், நாளை மறுநாள், தமிழ் இரண்டாம் தாளுக்கு தேர்வு நடக்கிறது.
    * மொத்தம், 6,256 பள்ளிகளில், 2,377 மையங்களில், 3.91 லட்சம் மாணவர்களும், 4.52 லட்சம் மாணவியரும் தேர்வு எழுதுகின்றனர்; தனித் தேர்வர்கள், 43,000 பேர். புதுச்சேரியில், 14,000க்கும் மேற்பட்டோர் தேர்வெழுதுகின்றனர்.
    மையங்களில் தனியார் செக்யூரிட்டி:
    தேர்வுக்கு பல நாள் முன்பே, வினாத்தாள், விடைத்தாள்களை அனுப்பியதால், பாதுகாப்பு குளறுபடியால், தீ விபத்து மற்றும் இரும்பு அலமாரி உடைப்பு சம்பவங்கள் நடந்துள்ளன. அதனால் பாதுகாப்பைப் பலப்படுத்த, தனியார் செக்யூரிட்டி நிறுவன ஊழியர்களை கூடுதல் பணி அமர்த்த உத்தரவிடப்பட்டு உள்ளது. தேர்வு மையங்கள், வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களில், பிளஸ் 2 பொதுத்தேர்வு நிதியை பயன்படுத்தி, தேர்வு முடியும் வரை, தனியார் செக்யூரிட்டிகளை நியமிக்க வேண்டும். இதற்கான நடவடிக்கையை, தலைமை ஆசிரியர் உடனே எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
    கோடிட்ட விடைத்தாள்
    * மாணவர்களின் கையெழுத்தை அழகாக்கும் விதமாக, கோடிட்ட விடைத்தாள் அறிமுகமாகிறது.
    * விடைத்தாள் வீணாவதைத் தடுக்க, பக்கங்களின் அளவும் குறைக்கப்பட்டுள்ளது.
    * மொழிப்பாடங்களுக்கு, 30 பக்கங்கள் கொண்ட கோடிட்ட முதன்மை விடைத்தாளும், கோடிட்ட கூடுதல் விடைத்தாள்களும் வழங்கப்படும்.
    * கணக்கியல் (அக்கவுன்டன்சி) தேர்வுக்கு, 46 பக்க விடைத்தாளில் முதல், 14 பக்கங்களில் கோடு இருக்காது.
    * கணினி அறிவியலுக்கு, 32 பக்கங்கள், உயிரியல் மற்றும் விலங்கியலுக்கு, இரண்டு, 'டாப் ஷீட்'களுடன், தனித்தனி முதன்மை விடைத்தாள் வழங்கப்படும்.
    * மற்ற பாடங்களுக்கு, 38 பக்கங்களுக்கு புதிய விடைத்தாள்கள் வழங்கப்படும்.
    * வரலாறுக்கு, இந்திய வரைபடமும்; புவியியலுக்கு, உலக வரைபடமும் தரப்படும்.
    * வணிகக் கணிதத்துக்கு, 'கிராப் ஷிட்' தரப்படும்.
    * முகப்புச் சீட்டில், மாணவர் புகைப்படம் இருக்கும்.
    மாணவர்களுக்கு நிபந்தனைகள் என்ன?
    * விடைத்தாளின் முகப்பு சீட்டில் உரிய இடத்தில் மாணவர் கையொப்பமிட வேண்டும்.
    * விடைத்தாளின் ஒரு பக்கத்தில், 20 முதல் 25 வரிகள் வரை எழுத வேண்டும்.
    * வினா எண்ணை, விடைக்கு அருகில் தவறாமல் எழுத வேண்டும்.
    * இரு விடைகளுக்கு இடையே இடைவெளி தேவை.
    * வினாத்தாள் வரிசையை (ஏ அல்லது பி) மதிப்பெண்களுக்கான பக்கத்தில் குறிப்பிட வேண்டும்.
    * விடைத்தாளில் நீலம் அல்லது கறுப்பு மை பேனாக்களால் மட்டுமே விடைகளை எழுத வேண்டும்.
    * விடைத்தாளில் எதுவும் எழுதாத பக்கங்களில் குறுக்குக் கோடிட வேண்டும்.
    * வினாத்தாளில் குறியீடு இடக்கூடாது.
    * விடைத்தாளை சேதப்படுத்தக் கூடாது.
    * விடைத்தாளில் தேர்வு எண், பெயர் அல்லது வேறு குறியீடு எழுதக் கூடாது.
    * வண்ண பேனா, பென்சில், ஸ்கெட்ச் எதையும் பயன்படுத்தக் கூடாது.
    * விடைத்தாளில் உள்ள மார்ஜின் கோட்டின் இடது பக்கம் எழுதக் கூடாது; அதே போல், வலது ஓரம் வரையிலும் எழுதக்கூடாது.
    * விடைத்தாள், புத்தகத் தாளை கிழிக்கவோ, நீக்கவோ கூடாது.
    * தன் தேவைகளை கண்காணிப்பாளரிடமே கேட்க வேண்டும்.
    * காப்பியடித்தால், தேர்வு மையத்திலிருந்து உடனே வெளியேற்றப்பட்டு, அவரது விடைத்தாள் தனியே குறித்து வைக்கப்படும்.
    * கண்காணிப்பாளரிடம் வாக்குவாதம் கூடாது. தேர்வு முடிந்த பின், தேர்வறை மற்றும் தேர்வு மையத்திலிருந்து உடனே வெளியேறி விட வேண்டும்.

    No comments: