Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Sunday, March 15, 2015

    பி.எஃப் பிடித்தத்தில் புதிய முறை கொண்டுவர அரசு முடிவு (மொத்தசம்பளத்தில் 12% சதவீதம் )

    தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (பி.எஃப்) பிடித்தம் செய்வதில் புதிய முறையை கொண்டு வர மத்திய அரசு முடிவுச் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஊழியர் ஒருவரின் சம்பளத்தில் அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படியை மட்டுமே கணக்கிட்டு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி பிடித்தம் செய்யப்படுகிறது.

    இந்த நடைமுறையை மாற்றி மொத்த சம்பளத்தில் 12 சதவீதம் கணக்கிட்டு பிஎப் பணத்தை பிடிக்கலாம் என்று மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இப்படி, ஊழியர் ஒருவரின் அனைத்து படிகள் உள்பட மொத்த சம்பளத்தில் 12 சதவீதம் பிஎப் தொகை பிடித்தம் செய்யும் போது அவரது பிஎப் கணக்கில் அதிக பணம் செலுத்தப்படும். அதே நேரத்தில் அந்த ஊழியரின் நிறுவனமும் அதே அளவிற்கான தொகையை பிஎப் நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய நிலை உருவாகும். அதே நேரத்தில் குறைந்த சம்பளம் வாங்கும் ஊழியர்களின் பங்கை அவர்களது விருப்பத்திற்கு விட்டுவிடலாமா என்றும் அரசு பரிசீலித்து வருவதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

    No comments: