Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, December 30, 2014

    PGTRB- ஆசிரியர் தேர்வு வாரியம் அதிரடி!

    தமிழகத்தில், வரும் ஜன., 10ம் தேதி முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டித்தேர்வு நடக்கவுள்ளது. இத்தேர்வுகளில், முறைகேடுகளை தவிர்க்கும் நோக்கில், முதன் முறையாக,புகைப்படத்துடன் கூடிய ஓம்.எம்.ஆர்., சீட் தேர்வர்களுக்கு வழங்க ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது.


    அரசு மேல்நிலைப்பள்ளிகளில், காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கான போட்டித்தேர்வுகள் ஜன., 10ம் தேதி மாநிலம் முழுவதும் நடக்கிறது. இத்தேர்வில், பங்கேற்க, ஒரு லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.இத்தேர்வுகளுக்கு, தேர்வு மையங்கள் பார்வையிடல், முதன்மை கண்காணிப்பாளர்கள், கண்காணிப்பாளர்கள், அறை கண்காணிப்பாளர்கள், பறக்கும்படை உறுப்பினர்கள் நியமிக்கும் பணி அனைத்து மாவட்டங்களிலும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.தேர்வில், முறைகேடுகளை தவிர்க்க, ஆசிரியர் தேர்வு வாரியம் கெடுபிடியை அதிகரித்துள்ளது. சமீபத்தில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு இதுகுறித்த ஆய்வுக்கூட்டம் சென்னையில் நடந்தது.

    கோவை மாவட்டத்தில், முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டித்தேர்வுக்கு 18 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 7500 தேர்வர்கள் தேர்வு எழுதவுள்ளனர். பார்வையற்றவர்கள், பார்வை குறைபாடுள்ளவர்களுக்கு, பயிற்சி பெற்ற துணை எழுத்தர்கள் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர்.தேர்வு பணியில் ஈடுபடவுள்ள, அலுவலர்களின் உறவினர்கள் தேர்வு எழுதவுள்ளனரா என்பதை, ஆய்வு செய்து, குறிப்பிட்ட அலுவலர்களுக்கு, தேர்வு பணியிலிருந்து விலக்கு அளிக்கவும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

    முதன்மை கல்வி அதிகாரி ஞானகவுரி கூறுகையில், ''ஆசிரியர்கள் தேர்வில் எவ்வகையிலும் முறைகேடுகள் நடைபெறாமல் இருக்க, ஆசிரியர் தேர்வு வாரியம், முனைப்பு காட்டுகிறது.

    1 comment:

    Unknown said...

    The TRB give space for write the candidate out of 150 questions, how many questions they are answered ?. This is very important. TRB provide this option in the OMR sheet.

    10th & 12th students in the public examination they are write in the front page how many page written.

    But in the competitive examination Why not provide this option?. this is very very very important. please provide this option and put signature of candidate and hall supervisor.