Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Friday, December 12, 2014

    கல்வித்துறையில் கோர்ட் அவமதிப்பு வழக்குகள்:விரைந்து முடிக்க அரசு செயலர் சபீதா உத்தரவு

    ''கல்வித் துறையிலுள்ள கோர்ட் அவமதிப்பு வழக்குகளையும், நிலுவையில் உள்ள வழக்குகளையும் விரைந்து முடிக்க வேண்டும்,'' என அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக் கல்வி செயலாளர் சபீதா உத்தரவிட்டார்.கல்வித் துறையில் உள்ள கோர்ட் வழக்குகளின் தன்மை உட்பட பல்வேறு செயல்பாடுகள் குறித்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களிடமும் நேற்று வீடியோ கான்பரன்சிங் மூலம் அவர் ஆலோசனை நடத்தினார். இயக்குனர் கண்ணப்பன், இணை இயக்குனர்கள் கருப்பசாமி, கார்மேகம், பழனிச்சாமி பங்கேற்றனர்.

    சபீதா பேசியது குறித்து கல்வி அதிகாரிகள் சிலர் கூறியதாவது: கல்வித் துறையில் ஆசிரியர்கள், ஊழியர்களின் பணப்பலன், பணி மூப்பு உட்பட பல காரணங்களுக்காக நுாற்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
    மதுரை உட்பட 10 மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களில் 400க்கும் மேற்பட்ட அவமதிப்பு வழக்குகள் உள்ளன. இவற்றை முடிவுக்கு கொண்டு வரும் நடவடிக்கைகளை முதன்மை கல்வி அலுவலர்கள் எடுக்க வேண்டும். முடிந்தளவு மனுதாரர்களை அழைத்து பேச வேண்டும்.
    கோர்ட் உத்தரவுப்படி அனைத்து அரசு பள்ளிகளிலும் கழிப்பறை வசதிகள் ஏற்படுத்துவதை ரெகுலர் மற்றும் எஸ்.எஸ்.ஏ., முதன்மை கல்வி அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும். கழிப்பறைகள் இல்லாத அரசு பள்ளிகள் என்ற சூழ்நிலை ஏற்பட வேண்டும் என அவர் உத்தரவிட்டதாக தெரிவித்தனர்.இன்று (டிச.,12) சென்னையில் அனைத்து மாவட்ட ரெகுலர் மற்றும் எஸ்.எஸ்.ஏ., முதன்மை கல்வி அலுவலர்களின் கூட்டம் நடக்கிறது.

    1 comment:

    AGP said...

    ஆனால் கணினி ஆசிரியர்களின் நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு மட்டும் 4 வார காலம் அவகாசம் கோரப்பட்டுள்ளது. 01.12.2014 அன்று உச்சநீதி மன்றம் 2 வார காலம் கொடுத்தது. அது போதாமல் இப்போது மீண்டும் 4 வாரம் கேட்கப்பட்டுள்ளது.


    கணினி ஆசிரியர்கள் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பதிவு மூப்பு அடிப்படையில் தேர்வு செய்ய சான்றிதழ் சரிபார்ப்புக்கான தேதியை வெளியிட்டுள்ளது ஆசிரியர் தேர்வாணையம். ஆனால் இதற்கு புதிய சிக்கல் உருவாகி உள்ளது. டிசம்பர் 24,25,26,27,28,29,30 தேதிகளில் நடக்கவிருந்த சான்றிதழ் சரிபார்ப்புக்கு தற்போது உச்சநீதி மன்றம் ஜனவரி 19, 2015 வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.

    பாதிக்கப்பட்ட 652 கணினி ஆசிரியர்கள் சார்பாக தொடரப்பட்ட வழக்கில் நீதியரசர் ரஞ்சன் கோகாய் மற்றும் ரோகின்டன் பாலி நாரிமன் ஆகியோர் அடங்கிய டிவிசன் பென்ச் (15.12.2014) இன்று இடைக்கால உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் நீதிமன்றத்தின் அடுத்த ஆணை வரும் வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தக்கூடாது என்று தகவல் வெளியாகி உள்ளது.

    07-03-2014 அன்று வழங்கிய தீர்ப்பில் பத்தி எண் 26-ல் பாதிக்கப்பட்ட 652 கணினி ஆசிரியர்களுக்கு பழைய வேலைவாய்ப்பு பதிவு எண்ணை புதுப்பித்து இந்த 652 கணினி ஆசிரியர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பள்ளிக்கல்வித் துறை செயலர் திருமதி.த.சபிதா அவர்கள் 652 கணினி ஆசிரியர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படாமல் நிராகரித்து அரசாணை (எண்:130) வெளியிட்டார். இதை எதிர்த்து 652 கணினி ஆசிரியர்கள் சார்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது என்பது குறிப்பிடதக்கது.

    பள்ளிக்கல்வித் துறை எந்த வழக்காக இருந்தாலும் உடனடியாக தீர்வு காணாது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கு வந்தால் தான் சற்று திரும்பி பார்க்கும் என்று கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.