தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட செயற்குழுக் கூட்டம், தலைவர் சந்திரன் தலைமையில் நடந்தது. மாநில பிரசார செயலாளர் சுரேஷ் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் உக்கிரபாண்டியன் வரவேற்றார்.
அக்கூட்டத்தில், ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு உடனடியாக நடத்த வேண்டும். அதில், பள்ளிகளின் காலிப் பணியிடங்களை மறைக்காமல் வெளிப்படையாக நடத்த வேண்டும். தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலை பள்ளிகள் பட்டியலை வெளியிட்டு, அதற்கான புதிய ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கி, அவற்றையும் பொது மாறுதல் மூலம் நிரப்ப வேண்டும்.
பி.டி.ஏ.,வின் அறிவியல் செய்முறை கையேடுகள் மாணவர்களுக்கு இலவசமாக வழங்கவேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
No comments:
Post a Comment