கடந்த 2 ஆண்டுகளாக குறைந்த ஊதியத்தில், சொந்த ஊரிலிருந்து வெகு தொலைவில் பணியாற்றி வரும் தங்களுக்கு இடமாறுதலுக்கான கவுன்சலிங் நடத்த வேண்டும் என்று சிறப்பு ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர். கடந்த 2 ஆண்டுகளாக குறைந்த ஊதியத்தில், சொந்த ஊரிலிருந்து வெகு தொலைவில் பணியாற்றி வரும் தங்களுக்கு இடமாறுதலுக்கான கவுன்சலிங் நடத்த வேண்டும் என்று சிறப்பு ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.
அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 2012ஆம் ஆண்டில் திருவண்ணாமலை மாவட்டத்தில் சுமார் 1,000 பேர் உள்பட தமிழகம் முழுவதும் சுமார் 16 ஆயிரம் பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.
5 முதல் 12 கி.மீ தூரத்துக்குள் இருக்கும் பள்ளிகளில் பணி அமர்த்திட வேண்டும், மாத தொகுப்பூதியமாக ரூ.5 ஆயிரம் மட்டுமே வழங்கப்படும், வாரத்துக்கு 3 நாள்கள் வேலை நாள்கள் என பணி நிர்ணயம் செய்யப்பட்டு, பணி ஆணைகள் வழங்கப்பட்டன.
இவர்களில் பெரும்பாலனவர்கள் அருகில் உள்ள பள்ளிகளில் நியமிக்கப்படவில்லை. இதற்கு மாறாக மாவட்டத்தின் பல பகுதிகளிலும், வெகு தொலைவில் உள்ள பள்ளிகளிலும், போக்குவரத்து வசதி இல்லாத கிராமப்புற பள்ளிகளிலும் சிறப்பாசிரியர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
தூரம் அதிகம், குறைவான சம்பளம் போன்ற பலக் காரணங்களால் நியமனம் செய்யப்பட்ட சிறப்பாசிரியர்களில் 10 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் பணியை விட்டு விலகியுள்ளதாக கல்வித் துறை வட்டாரங்கள் கூறுகின்றன. மேலும், இவர்களுக்கு மட்டும் மே மாத சம்பளம் மட்டும் வழங்கப்படுவதில்லை என்றும் கூறப்படுகிறது.
பெரும்பாலான பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறையினாலும், மாணவர்களின் நலன் கருதியும் பகுதி நேர சிறப்பாசிரியர்கள் முழு நேரமாகவே பணியாற்றிட வேண்டிய நிலைமை ஏற்பட்டு, பணி பளுவும் கூடியதாகத் தெரிகிறது.
இவ்வளவு சிரமங்களுக்கிடையே தங்கள் கஷ்டத்தை மறந்து சிறப்பாசிரியர்கள் பணியாற்றிவருகின்றனர்.
வழக்கமாக ஆசிரியர்களுக்காக நடத்தப்படும் இடமாறுதல் கலந்தாய்வு போல், பகுதி நேர சிறப்பாசிரியர்களுக்கும் (கவுன்சலிங் முறை) தமிழக அரசு நடத்தினால் சொந்த ஊருக்கு அருகே பணியாற்றிட வாய்ப்பு கிடைக்கும் என்றே அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
No comments:
Post a Comment