அனைத்து வகை ஆசிரியர்களும் தங்கள் பெயரின் தலைப்பெழுத்தை (இனிஷியல்) தமிழில்தான் எழுத வேண்டும் என கல்வித் துறை உததரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநர், அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
பள்ளி ஆசிரியர்கள் சிலர் தங்கள் பெயரின் தலைப்பெழுத்தை ஆங்கிலத்தில் எழுதி வருவதாகப் புகார்கள் வந்துள்ளன. அரசு ஆணையின்படி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், அமைச்சுப் பணியாளர்கள் உள்ளிட்டோர் தங்கள் பெயரின் தலைப்பெழுத்தை தமிழில்தான் எழுத வேண்டும்.
எனவே, தொடக்கக் கல்வித் துறையின் கீழுள்ள பள்ளிகளின் ஆசிரியர்கள் அனைவரும் தங்கள் பெயரின் தலைப்பெழுத்தை தமிழில் எழுத மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள், தொடர்புடைய பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment