ஆரம்ப கல்வி முதல் +2 வரை அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு மருத்துவம், பொறியியல், சட்டம் போன்ற படிப்புகளுக்கான கலந்தாய்வில் முன்னுரிமை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என டாக்டர்.தி.தேவநாதன் யாதவ் கேட்டுக்கொண்டுள்ளார்.
பெரும்பாலும் மருத்துவம், பொறியியல், சட்டம் போன்ற படிப்புகளுக்கான கலந்தாய்வின் போது தனியார் பள்ளிகளில் படித்த தொழிலதிபர்களின் வாரிசுகளுக்கு அதிக அளவில் இடங்கள் கிடைப்பதாகவும், இதனால் ஆரம்ப கல்வி முதல் +2 வரை அரசு பள்ளிகளில் படித்த ஏழை மாணவர்களுக்கு கலந்தாய்வில் இடம் கிடைப்பதில்லை என வேதனை தெரிவித்தார்.
எனவே இந்த நிலையை போக்க ஆரம்ப கல்வி முதல் +2 வரை அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு மருத்துவம், பொறியியல், சட்டம் போன்ற படிப்புகளுக்கான கலந்தாய்வில் முன்னுரிமை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டாக்டர்.தி.தேவநாதன் யாதவ் கேட்டுக்கொண்டார்.
No comments:
Post a Comment