மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மரியாதைக்குரிய அம்மா அவர்களுக்கு அம்மா, எங்கள் தாயை விட உங்களை மேலானாவர் என்று எண்ணி இந்த கடிதத்தை உங்களுக்கு சமர்பிக்கின்றோம். ஏனென்றால் எங்கள் தாய் எங்களுக்கு உயிர் கொடுத்தால் அந்த உயிரை பாதுக்காக்க உங்களால்தான் முடியும்.
நாங்கள் தவறாக பணியிலிருந்து நீக்கப்பட்ட 652 கணினி ஆசிரியர்கள், நாங்கள் பணியிலிருந்து நீக்கப்பட்ட நாளிலிருந்து மிகுந்த வேதனையில் உள்ளோம். எங்கள் குடும்பம், மனைவி, பிள்ளைகள் அணைவரும் மிகுந்த கஷ்டத்தில் ஆழ்ந்துள்ளோம்.
நாங்கள் கடந்த 1998 முதல் அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியராக மாதம் இரண்டாயிரம் சம்பளம் வாங்கி கொண்டு வேலை செய்தோம்.
அவர்கள் 14 வருடம் அரசு பள்ளிகளில் அவர்களுடைய உழைப்பையும், அவர்களுடைய இளமை அறிவையும் அரசு பள்ளி மாணவர்களுக்கு செலவழித்து விட்டார்கள்.
இப்போது அவர்களுக்கு சுமார் 45 வயதை கடந்தவர்களாக காட்சி அளிக்கிறார்கள். அவர்கள் வேற வேலையும் செய்து பிழைக்க வழியில்லை. அவர்கள் குடும்பம் மிகவும் கஷ்டத்தில் உள்ளது. பிள்ளைகளை படிக்க வைக்கமுடியாது என்றும், Home Loan, Society Loan என்று பல கடன்களை வாங்கி விட்டார்கள். இந்த காரணத்தினால் வருகின்றஜூன் 15 ம் தேதி யாருக்கும் இடஞ்சல் கொடுக்காமல் எங்களுடைய வீட்டிலேயே நாங்கள் தற்கொலை செய்யப்போகிறோம் என்பதை மிகுந்த வருத்ததுடன் தெரிவித்துக் கொள்கிறேன். நிச்சயமாக நடக்கும் அவ்வளவு வேதணையில் உள்ளோம். அம்மா
நாங்கள இரண்டு தேர்வுகளிலும் தேர்ச்சி பெறவில்லை என்று எங்களிடம் பேச கூட பள்ளிக்கல்வித்துறை தயங்குகிறது.
முதல் தேர்வு :-
652 பேரும் அரசு பள்ளிகளில் 1999 முதல் கணினி ஆசிரியர்களாக 2000 சம்பளத்தில் வேலை பார்த்து வந்தோம். எங்களின் வேலை திறனுகாகவும், ஏழை மாணவர்களுக்கு உதவி செய்த காரணத்திற்காகவும் 2007 ல் சிறப்பு ஆசிரியர் தேர்வு நடத்தினார்கள் . அதில் முதலில் 50 சதவீதம் எடுக்கவேண்டும் என்று சொன்னார்கள் பின்னர் 35 சதவீதம் எடுத்தால் போதும் என்று எங்களை பணியில் அமர்த்தீனார்கள். நாங்கள் சொல்லவில்லை 35 சதவீதம் போதும் என்று அவர்களே முடிவு செய்து எங்களை எங்களை தேர்வில் தேர்ச்சி பெற்று விட்டீர்கள் என்று கூறி அரசு வேலையில் கணினி பயிற்றுநராக அமர செய்தார்கள். இதில் எங்கள் மீது என்ன தவறு இருக்கிறது. ஆசிரியர் தேர்வு செய்த தவறுக்கு நாங்கள் பழியாகி விட்டோம்.
இரண்டாவது தேர்வு :-
பின்னர் 652 பேருக்கும் மறுதேர்வு நடத்தினார்கள் அதில் 42 கேள்வி தவறு என்று நாங்கள் முறையிட்டோம். இதை ஏற்க மறுத்த கோர்ட் தவறான 42 கேள்விகளையும் MADRAD IIT(மெட்ராஸ் ஐஐடி) யில் உள்ள கல்வி வல்லுனர் குழுவுக்கு அனுப்பினார்கள். அவர்கள் தவறான கேள்விகளை சோதித்து இதில் 20 கேள்விகள் முற்றிலும் தவறானது எனவும், 7 கேள்விகளுக்கு பதில் கூற முடியவில்லை என்று கூறி கோர்டில் ஒப்படைத்தார்கள். அதை வாங்கி கோர்ட் 20 கேள்விகளை மொத்த மதிப்பெண் 150ல் இருந்து கழித்து 130 க்கு மதிப்பீடு செய்து தேர்வு முடிவை வெளியிட்டார்கள்.
7 கேள்விகளுக்கு பதில் கூற முடியவில்லை என்று கூறி எங்களை 27.7.2013 அன்று வேலையில் இருந்து தூக்கி விட்டார்கள். 27 கேள்வி தவறு என்றால் யாரால் தேர்ச்சி பெற முடியம், 27 தவறான கேள்விகள் என்று கண்டறியவே 3 மணி நேரத்தில் பாதி நேரம் செலவழிந்து விட்டது. பின்னர் எப்படி தேர்ச்சி பெற முடியும். எங்களை தவறான கேள்விகள் எடுத்து எங்கள் வாழ்கையை சீரளித்து விட்டார்கள், அந்த 20 தவறான கேள்விக்கான நேரம் 1.15 மணி நேரத்தை திரும்ப தருவார்களா. ஆசரியர் தேர்வு வாரியம்.
நாங்களும் ஆசிரியர்கள்தான் அம்மா, நாங்கள் வகுப்பில் நடத்தும் தேர்வில் கூட தவறாக கேள்வி கேட்கப்பட்டால் , மாணவர்கள் அதற்கு மதிப்பெண் போடுங்கள் என்பார்கள். நீங்கள் தவறாக கேட்டால் நாங்கள் என்ன செய்வது என்று கூறி மதிபெண் போட வைத்து விடுவார்கள். வகுப்பு தேர்விற்கு இப்படி என்றால் வாழ்க்கை தேர்விற்கு எப்படி கழிக்க முடியும். கழி்த்து விட்டார்கள் ஆசிரியர் தேர்வு வாரியம்.
இரண்டு தேர்விலும் எங்களை பழிவாங்கி விட்டார்கள் ஆசிரியர் தேர்வு வாரியம். நாங்கள் இறந்தாலும் எங்களை வேலையில் தூக்கிய பள்ளிக்கல்விதுறையும், ஆசிரியர் தேர்வு வாரியமும் இனிமேல் திருந்த வேண்டும்.
** நடந்த முடிந்த முதுகலை தமிழாசிரியர் தேர்வில் கூட 21 தவறான கேள்விகளுக்கு மதிப்பெண் போட்டார்கள்.
** நடந்து முடிந்த ஆசிரியர் தகுதித்தேர்வில் 5 தவறான கேள்விகளுக்கு மதிப்பெண் போட்டு 4200 பேர் தேர்ச்சி பெற்றார்கள்.
** இப்போது நடந்த +2 கணித தேர்வில் கூட 6 தவறான கேள்விகளுக்கு மதிப்பெண் போட்டார்கள்.
நாங்கள் என்ன செய்தோம். எங்களுக்கும் தவறான கேள்விதான், நாங்கள் சொல்லவில்லை , மெட்ராஸ் ஐஐடி கல்வி வல்லுனர்கள் சொல்லி இருக்கிறார்கள்.
இவர்களாவது புதியவர்கள், நாங்கள் 14 வருடம் அரசு வேலையில் இருந்துள்ளோம். எங்களுக்கு கழித்து விட்டார்கள்.
மற்றவர்கள் போல் எங்களுக்கு சம உரிமை காட்டபடவில்லை, மற்றவர்கள் போல் எங்களுக்கு தவறான கேள்விகளுக்கு மதிப்பெண் கொடுக்கப்படவில்லை , மற்ற மனிதர்களை போல் எங்களையும் நடத்த வில்லை. நாய், பசு போன்று அணைத்து ஆடு, கோழியையும் பார்க்க வேண்டும் அதை கொன்று சாப்பிடக்கூடாது என்று என்று கூறும் நாம் , மற்ற மனிதர்களை போல் எங்களை பார்க்க வில்லை ஆதலால் நாங்கள் ஜூன் 15 ம் தேதி எங்களுடைய வீட்டிலேயே குடும்பத்துடன் தற்கொலை செய்யப்போகிறோம். . இது நிச்சியமாக நடக்கும்.
ஒரு முக்கிய செய்தி மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு எங்களை வேலையில் இருந்து தூக்கிய செய்தி தெரியவே தெரியாது, தெரியாமல் மறைத்து விட்டார்கள் கல்வி அலுவலர்கள். அம்மா அவர்கள் இதில் தலையிட்டு இவர்களின் இறப்பை தடுக்க வேண்டும். அம்மா இவர்கள் அணைவரும் மனம் நொந்து உள்ளார்கள், வெளியில் வராமல் வீட்டிலேயே அடைப்பட்டு கிடைக்கிறார்கள். ஆதலால் அம்மா அவர்கள் தலையிட்டு சுமூக தீர்வு காண வழிசெய்ய வேண்டும் என்று வேண்டி விரும்பிக்கொள்கிறேன்.
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மரியாதைக்குரிய அம்மா அவர்கள் பல நற்சேவைகளுக்கு நடுவே எங்களையும் பாதுகாக்க வழிசெய்ய
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மரியாதைக்குரிய அம்மா அவர்களும், அமைச்சர் அவர்களும், செயலர் அவர்களும், இயக்குநர் அவர்களும் எங்களை காப்பாற்றுவார்கள் என்று நம்புகிறோம்.
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மரியாதைக்குரிய அம்மா அவர்களுக்கு நாங்கள் சாக போகிறோம் என்று அரசாங்கத்தை மிரட்டுவதாக எண்ண வேண்டாம், எங்களுக்கு இதைதவிர வேற வழிஇல்லை அம்மா. நாங்கள் என்றும் ஆர்ப்பாட்டம் செய்யவோ, போராட்டம் நடத்தவோ மாட்டோம். அப்படி நடத்தவும் எங்களுக்கு மனம் இல்லை பணமும் இல்லை. மிகுந்த கஷ்டத்தில் உள்ளோம் அம்மா.
இவ்வளவு குளறுபடி இருக்கும்போது எதற்கு இந்த பள்ளிக்கல்வித்துறைக்கும் , ஆசிரியர்தேர்வு வாரியத்திற்கும் அவசரம்.
ஆசிரியர் தேர்வு வாரியம் இப்போது நினைத்தாலும் தவறான கேள்விகளுக்கு மதிப்பெண் போடலாம்.
10 comments:
பாதிக்கப்பட்ட கணினி ஆசிரியர்கள் நீங்கள் ஏன் சாக வேண்டும்.தவறு செய்தது கணினி ஆசிரியர் சங்கத் தலைவர் செல்வக்குமார்,செளந்தர்ராஜன்,சொகைல்,ஈரோடு ரவி இந்த நால்வரையும் கொலை செய்துவிட்டு பிறகு உங்கள் முடிவை அறிவிக்கலாம்
பாதிக்கப்பட்ட கணினி ஆசிரியர்கள் நீங்கள் ஏன் சாக வேண்டும்.தவறு செய்தது கணினி ஆசிரியர் சங்கத் தலைவர் செல்வக்குமார்,செளந்தர்ராஜன்,சொகைல்,ஈரோடு ரவி இந்த நால்வரையும் கொலை செய்துவிட்டு பிறகு உங்கள் முடிவை அறிவிக்கலாம்
இரண்டாவது தேர்வுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு பணம் கொடுக்க தலைக்கு ரூ.30,000 வரை வாங்கிய சஙகம் ரூ.2 கோடி ஏப்பம் விட்டதை யாராவது தட்டிக் கேட்க முடியுமா?
இரண்டாவது தேர்வுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு பணம் கொடுக்க தலைக்கு ரூ.30,000 வரை வாங்கிய சஙகம் ரூ.2 கோடி ஏப்பம் விட்டதை யாராவது தட்டிக் கேட்க முடியுமா?
Indha padhivai eludhiyathu yar
652 perudaya valkkayai iniyum kedukkadheergal panam koduthavargal sngathai poi kelungal nangal entha 30000 mum kodukkavillai 2vadhu thervirku appadi pass panna vendiya avasiyamum illai
veenaga 652 perai kulappathil vidadheergal nangal govt idam engal kuraigalai solgirome
652 perum mudhaalil ottrumayai iruppom endha sangamum vendam namakku
Meendum govt panam vaanginargal endru pottu cs b.ed paditha engalukku velai kodukkavidamal pannuvathey ungal velai
10 years sila per court il nindrey poludhai pokkinargal
Ippoludhavadhu thirundhungal
exam govt eludha sonnal eludhuvome
post post endru ketpadhaivida exam endral anaivarukkum vazhi vidungal seniorgale
seniority seniority endru koovikkondey irukkadheergal avargalai thagudhi illai endru sollivittu naam exam eludha bayappaduvadhen
652 avargalukkuthan seniority namakku exam than
itharku karanam sangam alla sangam illai endral nengal 4 yearsku munnadi intha problem vanthirukum. ithu ethi paratha visayam itharku trb than karanam question paper quality aga illai thvarara question than karanam
from 1990 onwwards we studied b.ed., in computer and also registered in employment exchange. Till now there is no call for the appointment of computer teacher. approximately we waited 24 years after finishing b.ed., But kalaignar govt. appointed those failed candidates in back gate without any other than money. Judgement also there when they appointing them in back gate. it is truly based on final judgement. finally god won.
652 ngU« r§f¤ij c©ikahf e«ÃæUªjhš Ϫj ãiyik ek¡F tªÂU¡fhJ. Â.K.f M£Áæš gâÚ¡f« brŒa¥g£l nghJ fh¥gh‰¿a r§f«, m«kh M£ÁæY« e«ik fh¥gh‰¿æU¡F«. rhF« tiu c©zhéuj« vd tjªÂia »s¥g nt©lh«. jtwhd brŒÂfis Ïizajs§fŸ btëælnt©lh«. j‰nghJ brašgL»wt®fŸ rçahd ghijæš br‹Wbfh©oU¡»wh®fŸ. e«Ã¡ifÍl‹ fh¤ÂU§fŸ. éiuéš bt‰¿ bgWnth«.
ENDA POST ORUVAKKUNATHUKKUM UNGALUKKA KASTHA PATTATHUKKUM THANDANAIYA
Post a Comment