Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, June 9, 2014

    172க்கு பதில் 72; மதிப்பெண் சான்றில் குளறுபடி ராசிபுரம் மாணவி பரிதவிப்பு

    tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperபிளஸ் 2 தேர்வு எழுதி வெற்றி பெற்ற மாணவி, கல்வித்துறையின் அலட்சியத்தால் ஏற்பட்ட மதிப்பெண் குளறுபடியால், பொறியியல் படிப்பை தொடர  முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகேயுள்ள கூனவேலம்பட்டி புதூரை சேர்ந்த தொழிலாளி கணபதியின் மகள் புவனேஸ்வரி.  அரசு உதவிபெறும் செங்குந்தர் மகாஜன மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 தேர்வு எழுதினார்.
    இவர், தமிழ் 192, ஆங்கிலம் 146, இயற்பியல் 177, வேதியியல் 190,  கம்ப்யூட்டர் சயின்ஸ் 183, கணிதம் 72 என மொத்தம் 1200க்கு 960 மதிப்பெண்கள் பெற்றுள்ளதாக ரிசல்ட் வெளியானது. கணிதத்தில் 72 மதிப்பெண்கள் மட்டுமே  எடுத்தது மாணவிக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து அவர், கணித பாட மதிப்பெண் சான்றிதழ் நகல் கேட்டு பள்ளி கல்வி துறையினருக்கு மனு  செய்திருந்தார். அதன் மூலம் சில நாட்களுக்கு முன்பு கிடைத்த சான்றிதழின் நகலில், கணித பாடத்தில் 172 மதிப்பெண்கள் பெற்றிருப்பதாக இருந்தது. இவர், ஆரம்பத்தில் பொறியியல் கல்லூரியில் சேர கட்&ஆப் மதிப்பெண்கள் இல்லையென கருதி கவுன்சலிங்கிற்கு விண்ணப்பிக்காமல் விட்டு விட்டார். தற்போது  கணிதத்தில் 100 மதிப்பெண்கள் அதிகம் கிடைத்துள்ளதால் மகிழ்ச்சியடைந்துள்ள மாணவி, பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க முடியாமல் போனதை எண்ணி  கவலையடைந்துள்ளார். இதற்கு பள்ளி கல்வித்துறையின் அலட்சியமே காரணம். தற்போது விண்ணப்பித்தால் தனது பொறியியல் படிப்பு கனவு நனவாகுமா? என்ற  ஏக்கத்தில் மாணவி காத்திருக்கிறார். - See more at: http://www.tamilmurasu.org/Inner_Tamil_News.asp?Nid=57874#sthash.ZEtFTxwA.UrZ5rLFv.dpuf

    1 comment:

    Anonymous said...

    20000 mark sheet il thavarugal
    data entry il 172 ikku 72 mark
    ippadithan 652 cs teachers illamal paditha students nilamayum
    kalvithurai arasu palli manavargalin nilayai unarndhu viraivil 652 cs teachers imeendum velai kodukkavum
    last year cs students computer i kannal kooda parkkavillai
    arasukku 200 money seluthugirargal
    pavam students cm amma than avargali patri ninaithu parkka vendum
    Karunai katta vendum