ஊராட்சி ஒன்றிய, நகராட்சிப் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு
ஜூன் 17 முதல் 28-ஆம் தேதி வரை 12 நாள்கள் நடைபெற உள்ளது.
ஜூன் 17-ஆம் தேதி முற்பகல் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பணிமாறுதல் கலந்தாய்வும்,
அன்று பிற்பகல் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு கலந்தாய்வும் நடைபெறுகிறது.
18-ஆம் தேதி முற்பகல் பட்டதாரி ஆசிரியர்கள் பணி நிரவல் கலந்தாய்வும்,
பிற்பகலில் பட்டதாரி ஆசிரியர்கள் ஒன்றியத்திற்குள் மாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வும் நடைபெறுகிறது.
19-ஆம் தேதி பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாவட்டத்திற்குள் மாறுதல் (ஒன்றியம் விட்டு ஒன்றியம்) கலந்தாய்வும்,
21-ஆம் தேதி பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் மாறும் கலந்தாய்வும்,
23-ஆம் தேதி முற்பகல் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாறுதல் கலந்தாய்வும்,
பிற்பகலில் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு கலந்தாய்வும் நடைபெறும்.
வரும் 24-ஆம் தேதி இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி நிரவல் கலந்தாய்வும்,
25-ஆம் தேதி இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒன்றியத்துக்குள் மாறுதல் கலந்தாய்வும்,
26-ஆம் தேதி இடைநிலை ஆசிரியர்களுக்கு மாவட்டத்துக்குள் மாறுதல் (ஒன்றியம் விட்டு ஒன்றியம்) கலந்தாய்வும்,
28-ஆம் தேதி இடைநிலை ஆசிரியர்களுக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வும் நடைபெற உள்ளது.
No comments:
Post a Comment