10–ம் வகுப்பு
அரசுப் பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவ மாணவிகளுக்கு சம்பந்தப்பட்ட பள்ளிகளில்
சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளன என மாவட்ட கலெக்டர் தரேஸ் அஹமது
தெரிவித்தார்.
பெரம்பலூர் மாவட்டத்தில்
10–ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வை மொத்தம் 9 161 பேர் தேர்வெழுதினர். இதில் 4457 மாணவர்களும்
4001 மாணவிகள் என மொத்தம் 8458 பேர் தேர்ச்சி பெற்றனர்.
இதில் தேர்ச்சி
பெறாத பலர் உடனடித் தேர்வெழுத ஆர்வமும் உயர்கல்வி பயில வசதியின்றி உள்ளவர்கள் தடையின்றி
உயர்கல்வி கற்க வசதியாக மாணவர்களுக்கு ஆலோசனை அளிக்க மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது ஏற்பாடு
செய்திருந்தார்.
அதன்படி பெரம்பலூர்
மாவட்டத்தில் 10–ம் வகுப்பில் தேர்ச்சி பெறாத 607 மாணவர்கள் தங்களது பெற்றோருடன் பங்கேற்ற
சிறப்புக் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில்
பங்கேற்று ஆட்சியர் பேசியது:
உயர்கல்வி கற்கும்
வரை மாணவ மாணவிகளின் ஏழ்மையும் குடும்பச் சூழலும் தடையாக இருக்கக் கூடாது. 10–ம் வகுப்பு
தேர்ச்சி பெறாத மாணவர்கள் அதற்கான விண்ணப்பத்தை சம்பந்தப்பட்ட பள்ளிகளில் அளித்து தேர்வுக்
கட்டணத்தை செலுத்த வேண்டும். மேலும் இந்த மாணவர்களுக்காக சிறப்பு வகுப்புகள் அந்தந்தப்
பள்ளிகளில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பள்ளி நாள்களில் தவறவிட்ட பாடங்களை சிறப்பு
வகுப்புகளில் முழுமையாகப் படித்து தேர்வெழுதினால் நிச்சயம் வெற்றிபெறலாம்.
கொளக்காநத்தம்
பாடாலூர் துங்கபுரம் கை.களத்தூர் வாலிகண்டபுரம் குரும்பலூர் செட்டிக்குளம் ஆகிய 7 அரசுப்
பள்ளிகளில் பிளஸ்–
2 படித்து தேர்ச்சி பெறாமல் உடனடித் தேர்வுக்கு குறித்த காலத்தில் விண்ணப்பிக்காத
23 மாணவ மாணவிகள் மீண்டும் அந்தத் தேர்வை எழுதுவதற்காக தமிழக அரசின் முதன்மைச் செயலாளரிடம்
பேசி சிறப்பு அனுமதி பெற்றுத்தர முயற்சி மேற்கொள்ளப்படும்.
எனவே தாமதமின்றி
அந்தந்தப் பள்ளிகளில் தேர்வுக் கட்டணத்தை செலுத்தித் தயாராக இருக்க வேண்டும் என்றார்.
இதில் முதன்மைக்
கல்வி அலுவலர் மகாலிங்கம் மாவட்டக் கல்வி அலுவலர் பாலு அனைத்துப்பள்ளி தலைமை ஆசிரியர்கள்
தேர்ச்சி பெறாத மாணவர்கள் பெற்றோர் ஆகியோர் பங்கேற்றனர்
No comments:
Post a Comment