Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Saturday, December 28, 2013

    தொடக்கப் பள்ளி பட்டதாரிகளுக்கும் பதவி உயர்வு வழங்க கோரிக்கை

    அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வள மையங்களில் பணியாற்றும் 47 மேற்பார்வையாளர்கள், 17 ஆசிரியர் பயிற்றுநர்களும் மேல்நிலை பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர்களாக  மாறுதல் செய்யப்பட உள்ளனர். மேலும், 1.1.13 தேதியில் வெளியிடப்பட்ட தகுதி வாய்ந்தோர் முன்னுரிமைப் பட்டியலில் இடம் பெற்றுள்ள பட்டதாரி ஆசிரியர்கள் 897 பேருக்கு பதவி உயர்வு
    இன்று பதவி உயர்வு வழங்கப்படுகிறது. இதுகுறித்து தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க தலைவர் தியாகராஜன் கூறியதாவது: தொடக்கப் பள்ளிகளில் கடந்த 2004-2005ம் ஆண்டு முதல் 23,000 பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். ஆனால் அவர்களுக்கு இதுவரை பதவி உயர்வு என்பதே வழங்கப்படவில்லை. 

    இவர்களில் உயர்நிலை பள்ளிகளில் நியமிக்கப்பட்டவர்கள், ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில் நியமிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்கி வருகின்றனர். ஆனால் தொடக்க பள்ளிகளில் நியமிக்கப்படும் பட்டதாரிகளுக்கு பதவி உயர்வே வழங்கப்படாத நிலை உள்ளது. இதை தவிர்க்க, நேரடி நியமனங்கள் செய்யும் போது, 50 சதவீதத்தில் 25 சதவீதம் பேரை தொடக்க பள்ளி பட்டதாரிகளில் இருந்து எடுத்து பதவி உயர்வு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்று நடக்க உள்ள கவுன்சலிங்கில் எங்களுக்கும் வாய்ப்பு அளிக்க வேண்டும்.

    3 comments:

    Anonymous said...

    தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநிலப் பொதுச்செயலாளர், இது குறித்து பள்ளக்கல்வி அமைச்சர் கூட்டிய கூட்டத்தில் அனைத்து இயக்குனர்களின் முன்னிலையிலும், அனைத்து ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் முன்னிலையில் கோரிக்கை வைத்து பேசி உள்ளார் ,தோழரே,

    Anonymous said...

    நண்பர் தியாகராஜனுக்கு ஒரு திருத்தம், தொடக்க பள்ளியில் எந்த பட்டதாரி ஆசிரியரும் பணியாற்ற வில்லை, நடுநிலைப்பள்ளியில் தான் பணிபுரிகின்றனர் எனவே நீங்கள் உங்கள் கோரிக்கைகளை வெளிப்படுத்தினால் தொடக்க கல்வித்துறை என வெளிப்படுத்தவும்

    Anonymous said...

    Thank you very much,Sir. As a team we are all here to support you.
    D.Savitha,
    B.T. Asst.
    P.U.M.S. Thalakanchery,
    Thiruvallur Block