Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, December 9, 2013

    சீனா-பிரேசில் கூட்டு முயற்சியில் ஏவப்பட்ட விண்கலம் செயலிழந்தது

    விண்வெளித் துறையில் வேகமாக வளர்ந்து வரும் சீனா தற்போது வணிக ரீதியிலான விண்கலங்களை ஏவி வருகிறது. இந்நிலையில், பிரேசிலின் கூட்டு முயற்சியில் தயாரிக்கப்பட்ட தூரப்பகுதிகளை பற்றி ஆராயும் சியூயான் ஐ-03 என்ற விண்கலத்தை லாங் மார்ச் 4-பி என்ற ராக்கெட் மூலம் இன்று ஏவியது.
    சீனாவின் ஷாங்ஜி மாகாணத்தில் இருந்து ஏவப்பட்ட இந்த விண்கலம் அதன் சுற்றுவட்டப்பாதையை சென்று அடைவதற்கு முன்பே செயலிழந்தது. இதனால் இந்த ஆய்வு முயற்சி தோல்வியில் முடிந்தது. இந்த தவறு குறித்து சீன பிரேசில் விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருவதாக ராணுவத்தகவல்கள் தெரிவிக்கின்றன. சீனா தனது படைப்புகளான நீண்ட தூர பயண ராக்கெட்டுகளை வணிக ரீதியில் பயன்படுத்தி வருகின்றது. உலக அளவில் கூட்டு முயற்சியில் வணிக ரீதியிலாக ஏவப்படும் செயற்கை கோள்களின் எண்ணிக்கையை 3ல் இருந்து15 சதவிகிதம் வரை உயர்த்துவதற்கு முடிவெடுத்துள்ளதாக சீனா ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    No comments: