Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, December 9, 2013

    அதிகரிக்கும் பட்டதாரிகள் - திணறும் சீனா

    சீனாவில் அடுத்தாண்டு கல்லூரிப் பட்டம் பெற்றவர்களின் எண்ணிக்கை 7.27 மில்லியனாக (70 லட்சத்திற்கும் மேல்) இருக்கும் என்று கூறப்படுகிறது.


    இதனால், வேலை வாய்ப்பு சந்தையில் பெரும் சிக்கல் உருவாகும் நிலை உள்ளது. அந்நாட்டின் கல்வித்துறை அமைச்சகம், மாணவர்களுக்கு விடுத்துள்ள வேண்டுகோள் என்னவெனில், "பட்டப் படிப்பு முடித்த மாணவர்கள், நாட்டின் பெரிய நகரங்களுக்கு வேலைதேடி சென்று சிரமங்களை சந்திப்பதைவிட, நடுத்தர அளவுள்ள நகரங்களில் பணி வாய்ப்புகளைத் தேடுவது நல்லது.

    மேலும், அந்த பட்டதாரிகள், அடிப்படை நிலையிலான நிறுவனங்களில் பணி வாய்ப்புகளைத் தேடலாம். அவர்கள் பொதுத்துறை அல்லாத நிறுவனங்களில் சேர்ந்து பணிபுரிவதன் மூலமாக, வேலை வாய்ப்புகளைப் பெருக்கி, அதன்மூலம் தனியார் துறை பொருளாதாரத்தை சிறப்பாக்க முடியும்" என்று தெரிவிக்கிறது.

    சீனாவின் உள்நாட்டு அரசாங்க அமைப்புகள், அதிகளவிலான பட்டதாரிகளை பணிக்கு அமர்த்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. இதன்மூலம் பட்டதாரிகள் தங்களுக்கான சொந்த தொழிலை தொடங்குவார்கள். மேலும், அதற்கான அனுமதி வழங்கும் நடைமுறையை எளிதாக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

    No comments: