Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Wednesday, May 15, 2013

    அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகள் தொடங்குவதை கைவிடக் கோரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்! - நாளிதழ் செய்தி

    அரசு பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகள் தொடங்கும் முடிவை தமிழக முதல்வர் கைவிட வேண்டும் என வலியுறுத்தி தமிழக மாணவர் முன்னணியினர் ஊர்வலமாக சென்று வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு உதவி ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
    அரசு பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகள் தொடங்குவதை தமிழக முதல்வர் கைவிட வலியுறுத்தி தமிழக மாணவர் முன்னணி அமைப்பாளர் வே.சுப்பிரமணியசிவா தலைமையில் ஆ.குபேரன், பாலு, ஜான்பாண்டியன், மணிமாறன், பவித்ரா, யவனராணி உள்ளிட்ட சுமார் 50 மாணவ, மாணவியர்கள் ஊர்வலமாக சென்று சிதம்பரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் உதவி ஆட்சியர் எல்.சுப்பிரமணியத்திடம் கோரிக்கை அடங்கிய மனுவை அளித்தனர்.

    மாணவர்களை கண்டித்த உதவிஆட்சியர்: தமிழக மாணவர் முன்னணியினர் ஊர்வலமாக  உதவிஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்து மனு அளிக்கச் சென்றனர். ஆனால் உதவிஆட்சியர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியில் இருந்ததால் மாணவர்கள் ஊர்வலமாக அங்கு சென்று ஆர்ப்பாட்டம் செய்து மனு அளிக்க சென்றனர். அப்போது ஜமாபந்தி நிகழ்ச்சியின் போது இங்கு வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு மனு கொடுப்பது தவறான செயலாகும் என உதவிஆட்சியர் எல்.சுப்பிரமணியன் மாணவர் முன்னணி நிர்வாகிகளை கண்டித்தார். பின்னர் மாணவர் முன்னணி நிர்வாகிகள் உதவிஆட்சியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து மாணவர்களுக்கு உதவிஆட்சியர் எச்சரிக்கை விடுத்து மனுவை பெற்றுக் கொண்டார்.

    1 comment:

    Anonymous said...

    private school a english medium na kaka mating... government school a start pana matum ... kakreenga... asingama illa... Y Did u admitt the children in private..school . first admiit your childrena in government schools ok...then u go for strike