Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, May 30, 2013

    பொறியியல், மேலாண்மை பட்டதாரிகளுக்கு நல்ல பணி வாய்ப்புகள்

    உலகெங்கிலுமுள்ள பல பணியாளர்கள், ஒவ்வொரு மாதமும், தாங்கள் பெறுகின்ற ஊதிய காசோலைகளின் மீது எப்போதும் ஆர்வமாக இருப்பார்கள் என்பது இயல்பே. ஆனால், அமெரிக்காவிலுள்ள அஈகஐணஞி என்ற நிறுவனம்தான், இதுபோன்ற ஊதிய காசோலை தொடர்பான
    செயல்பாடுகளுக்கு பொறுப்பான நிறுவனம் என்ற உண்மை பலருக்கும் தெரியாது.

    அமெரிக்க பணியாளர்கள் 6 பேரில் ஒருவருக்கும், உலகின் பிற நாட்டு பணியாளர்கள் 1 கோடி பேருக்குமான ஊதிய காசோலை செயல்பாட்டை இந்நிறுவனம் மேற்கொள்கிறது.

    இதுபோன்ற எளிமையான மனிதவள நடவடிக்கையை அவுட்சோர்சிங் விட்டுவிடுவதால், உலகெங்கிலுமுள்ள பலவிதமான வணிக நிறுவனங்கள், தங்களின் நேரம் மற்றும் பணம் ஆகியவற்றை சேமிக்கின்றன. மேலே சொன்ன ADP Inc எனும் நிறுவனங்களுக்கு சேவை வழங்கும் நிறுவனமானது, பணியாளர் தொடர்பான பலவிதமான நடவடிக்கைகளில் உதவி புரிகின்றன. பணியமர்த்துவதிலிருந்து, பணி ஓய்வுபெறும் வரை அவை அடங்கும்.

    பலவிதமான பணிகள்

    ADP நிறுவனத்தின் பணிகள் பலவிதமானவை. அவர்களின் RUN என்ற ப்ரோகிராம், சிறிய நிறுவனங்களுக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு payroll சேவையாகும். ஒரு நிறுவனம், தனது payroll குறித்த தகவலை, web access அல்லது மொபைல் மூலமாக அனுப்புகிறது மற்றும் அதை ADP செயல்படுத்துகிறது. இதற்கு தனி சாப்ட்வேர் தேவையில்லை. இந்த ADP நிறுவனம், அர்ப்பணிப்பு மற்றும் உயர்தொழில்நுட்ப அம்சங்களுடன், ஒரு நிறுவனத்தின் HR and benefits ஆகியவற்றிலிருந்து, pre-employment சேவைகளான recruiting and screening போன்ற பணிகள் வரை உதவி புரிகிறது.

    இந்தியா, ஒரு தொழில்நுட்ப பிராந்தியம்

    ஒரு நிறுவனத்தின் வெற்றியானது, அதன் தொழில்நுட்ப செயல்பாட்டை மையமாக வைத்தே தீர்மானிக்கப்படுவதால், இந்தியாவில் அமைந்திருக்கும் ADP-ன் Global In-House மையமான(GIC), ADP Private Limited, இதுதொடர்பான முக்கிய பங்களிப்பை செய்கிறது.  GIC என்பது வெறுமனே ஒரு back office processing unit யூனிட் மட்டுமல்ல. உலகளாவிய வர்த்தகத்திற்கு ஒரு முக்கியப் பங்கினையும் ஆற்றுகிறது. ஐதராபாத் மற்றும் புனேவில், உலகத்தரம் வாய்ந்த வசதி வாய்ப்புகளை, ADP Private Limited இயக்குகிறது. இதன்மூலமாக, இதனோடு இணைந்த நிறுவனங்களுக்கு, பலவிதமான செயல்பாடுகள், துறைகள் மற்றும் தொழில்நுட்பங்களில் பணியாற்றும் வாய்ப்புகள் கிடைக்கின்றன.

    தற்போதைய நிலையில், இந்நிறுவனம், BPO/KPO, RIM and R&D போன்ற தன்னுடைய வணிகப் பிரிவுகளில், புதிதாக படிப்பை முடித்த மாணவர்களை பணியமர்த்தும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

    வளாக பணிவாய்ப்பு

    ஐ.ஐ.டி., என்.ஐ.டி., போன்ற தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களிலிருந்தும், நாட்டின் முதன்மையான வணிகப் பள்ளிகளிலிருந்தும், தனக்கான ஆட்களை பணியமர்த்துகிறது. பொறியியல் பிரிவைப் பொறுத்தவரை, அனைத்து circuit பிரிவுகள் மற்றும் கணிப்பொறி அறிவியல் ஆகிய பிரிவுகளை சேர்ந்த மாணவர்களையும், மேலாண்மை படிப்பை பொறுத்தவரை, மார்க்கெடிங், எச்.ஆர்., பைனான்ஸ் மற்றும் ஆபரேஷன்ஸ் போன்ற பிரிவுகளில் ஸ்பெஷலைசேஷன் செய்தவர்களையும் பணிக்கு எடுத்துக்கொள்கிறது.

    ஒவ்வொரு ஆண்டும் இந்த நிறுவனம், அதிகளவிலான பொறியியல் மாணவர்களை, இந்நிறுவனம் பணிக்கு எடுத்துக்கொள்கிறது. வளாக ஆளெடுப்பு செயல்பாடானது, வழக்கமாக, 2 முதல் 3 சுற்றுகளைக் கொண்டது. Quantitative, aptitude & verbal திறன்கள் சோதிக்கப்படுகின்றன. மேலும், டெக்னிக்கல் மற்றும் எச்.ஆர்., சுற்றுக்களும் உண்டு.

    துறையை தாண்டிய அறிவு

    இந்நிறுவனத்திற்கான ஆளெடுப்பு நடைமுறையானது அதிகளவிலான அறிவுத்திறன் எதிர்பார்ப்பைக் கொண்டது. எனவே, ஒரு மாணவர், தொழில்நுட்ப அறிவுடன், குவான்டிடேடிவ் திறன்கள், aptitude, ஆளுமைத்திறன், மென்திறன்கள் மற்றும் நல்ல தகவல்தொடர்பு திறன் போன்றவைகளையும் பெற்றிருக்க வேண்டும்.

    சவாலான பணி நிலைகள்

    நிறுவனங்களைப் பொறுத்து, R&D துறையில், பல்வேறான பணி நிலைகள் உள்ளன. SAP testing, SAP functional consultant, SAP ABAP, Java developer, automation testing, siebel tester, oracle developer, mobile tester and user interface developer போன்றவையே அவை.

    அதேசமயம், மேலாண்மை படிப்பை முடித்தவர்கள், business analyst, consultants, project leaders, operation manager and project manager போன்ற பணி பொறுப்புகளை எதிர்பார்க்கலாம்.

    வளாகத்தை தாண்டி...

    பெரிய கல்வி நிறுவனங்களில் படிக்காத மாணவர்கள்கூட, Pehchaan, the internal employee referal programme, ADP&'s LinkedIn page போன்ற job portals மூலமாக, ADP -ல் பணி வாய்ப்புகளைப் பெறலாம்

    ஓரியண்டேஷன்

    ADP நிறுவனத்தில் புதிதாக பணிக்கு சேர்ந்தவர்கள், தங்களின் குடும்பத்தினரை, நிறுவனத்திற்கு அழைத்து வரும்படி கேட்டுகக்கொள்ளப்படுவார்கள். அங்கே அவர்கள், ADP உறுப்பினர்கள் மற்றும் மூத்த பொறுப்பாளர்களுடன் கலந்துரையாடும் வாய்ப்புகளைப் பெறுவார்கள். மேலும், குறைகளை தெரிவித்தல், வழிகாட்டுதலைப் பெறுதல், மேம்பாட்டிற்கான சிந்தனை பரிமாற்றங்களை மேற்கொள்ளல் போன்றவற்றுக்கான வாய்ப்புகள் இச்சமயத்தில் வழங்கப்படும்.

    பணியில் சேரும் நடைமுறைகள் தவிர்த்த, மூன்று நாள் ஓரியண்டேஷன் நிகழ்ச்சியானது, வரவேற்பு உணவு, சுற்றுலா மற்றும் வணிக முக்கியஸ்தர்களின் உரைகள், ADP மேலாண்மை இயக்குநருடன் 3 மணிநேர கலந்துரையாடல் போன்ற அம்சங்களைக் கொண்டது.

    புதியவர்களுக்கான வளர்ச்சிப் பாதை

    வணிக நடவடிக்கைகளைப் பொறுத்து, ஒரு புதிய பணியாளரின் வளர்ச்சிப் பாதை அமைகிறது. ஒரு சாதாரண குழு உறுப்பினர் என்ற நிலையிலிருந்து, ப்ராஜெக்ட் தலைவர், subject matter experts, architects போன்ற பணி நிலைகளுக்கு உயரும் வாய்ப்புகளும் இருக்கிறது. மேலும், தங்களின் திறமையை நிரூபிக்கும் வகையில், பல்வேறான வாய்ப்புகளும் கிடைக்கின்றன.

    ஊதியம்

    ADP தரும் சம்பளமானது, சில முன்னணி ஐ.டி., நிறுவனங்களின் சம்பளத்தைவிட அதிகம். நல்ல பணி சூழல், கணிசமான சம்பள உயர்வு, வாழ்க்கை - பணி சமநிலை போன்றவை, ADP -ல் குறிப்பிடத்தக்கவை என்று தற்போதைய பணியாளர்கள் திருப்தி தெரிவிக்கிறார்கள். மேலும், சமீபத்திய தொழில்நுட்ப வளர்ச்சியைப் பற்றி அறிந்துகொள்ள வாய்ப்புகள் ஏற்படுவதோடு, புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதற்கும் பஞ்சமில்லை என்றே சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    No comments: