கடந்த சில ஆண்டுகளாகவே விடைத்தாள் நகல் கோரியும், மறுகூட்டல் கோரியும் விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு 75 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவரகள் விடைத்தாள் நகல், மறுகூட்டல் கோரி ஆன்-லைன் மூலம் விண்ணப்பித்துள்ளனர்.
பி.இ., எம்.பி.பி.எஸ். கலந்தாய்வில் ஒரேயொரு மதிப்பெண்கூட ரேங்க் பட்டியலில் பல இடங்கள் பின்னுக்குத் தள்ளிவிடும் என்பதால் விடைத்தாள் நகலைப் பார்க்கவும், மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கவும் மாணவர்கள் ஆர்வமாக இருக்கின்றனர். இவர்களில் விடைத்தாள் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் விடைத்தாள் நகல் கிடைத்தவுடன் பள்ளி ஆசிரியர்களுடன் கலந்தாலோசிக்க வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அதிக மதிப்பெண் பெற்ற பல மாணவர்களுக்கும் விடைத்தாள் மறுமதிப்பீட்டின்போது மதிப்பெண் குறைந்துள்ளது. மறுமதிப்பீட்டில் மதிப்பெண் குறைந்தாலோ, அதிகரித்தாலோ அந்த மதிப்பெண்தான் இறுதி மதிப்பெண்ணாகக் கருதப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
எனவே, விடைத்தாள் நகலைப் பெற்றவுடன் அந்தந்தப் பாட ஆசிரியர்களைக் கொண்டு ஒவ்வொரு பகுதியையும் முழுமையாக ஆய்வுசெய்ய வேண்டும். விடைத்தாள் முழுமையாக மதிப்பீடு செய்யப்படும் என்பதால், மதிப்பெண் வழங்கப்படாத அல்லது தவறாக மதிப்பீடு செய்யப்பட்ட ஒரு கேள்வியை கருத்தில்கொண்டு மட்டும் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கக் கூடாது.
விடைத்தாளில் உள்ள பிற கேள்விகளுக்கான விடைகள், அவற்றுக்கான மதிப்பீடுகளையும் பாட ஆசிரியர்களைக் கொண்டு மாணவர்கள் முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும்.அவ்வாறு ஆய்வு செய்த பிறகு மதிப்பெண் குறைய வாய்ப்பில்லை என்பதை உறுதி செய்துகொண்ட பிறகே மறுமதிப்பீட்டுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.

No comments:
Post a Comment