பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் தரேஷ் அஹமது வெளியிட்ட அறிக்கை: பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் படித்து எஸ்.எஸ்.எல்.ஸி., பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த
மூன்று மாணவர்கள், மாணவிகள் மற்றும் மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர் மரபினர் வகுப்பை சார்ந்த இரண்டு மாணவர்கள், இரண்டு மாணவிகள் ஆக மொத்தம் 10 மாணவ, மாணவிகளை தேர்வு செய்து அவர்கள் விரும்புகின்ற தமிழகத்திலுள்ள சிறந்த தனியார் மேல்நிலைப் பள்ளிகளில் சேர்ந்து மேல்நிலைக்கல்வி பெற அரசால் நிதியுதவி வழங்கப்படுகிறது.இத்திட்டத்தில் உதவிபெறும் மாணவ, மாணவிகளின் பெற்றோரது ஆண்டு வருமானம் ஒரு லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். இத்திட்டத்தின் கீழ், ஒரு மாணவருக்கு உயர்ந்தபட்சமாக ஆண்டுக்கு 28 ஆயிரம் ரூபாய்க்கு மிகாமல் இரண்டாண்டுக்கு 56 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படுகிறது.
எனவே, மார்ச் 2013ம் ஆண்டில் எஸ்.எஸ்.எல்.ஸி., பொதுத்தேர்வை எழுதி அதிக மதிப்பெண் பெற்ற தகுதியுடைய மாணவ, மாணவிகள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தில் விண்ணப்பித்து பயன்பெற வேண்டும்.
மேலும், விபரங்கள் பெற கலெக்டர் அலுவலக தரைதளத்தில் செயல்பட்டு வரும் மாவ ட்ட பிற்படுத்தப்பட்ட நல அலுவலகத்தில், நல அலுவலரை தொடர்பு கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment