Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, May 27, 2013

    பள்ளிக்கல்வி துறைக்கு மாறிய 4000 பட்டதாரி ஆசிரியர்களின் பதவி உயர்வு கனவு பலிக்குமா?

    தமிழகம் முழுவதும், தொடக்கக் கல்வித்துறையில் இருந்து பள்ளிக்கல்வித்துறைக்கு அலகு மாறுதலில் (யூனிட் டிரான்ஸ்பர்) சென்ற 4 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் தொடக்கப்பள்ளிகளில் 1 முதல் 8ம் வகுப்பு வரை இடைநிலை ஆசிரியர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டு வந்தனர்.
    தொடக்கக் கல்வியை உயர்த்தும் நோக்கில், கடந்த 2004ம் ஆண்டு 6 முதல் 8ம் வகுப்புகளுக்கு பட்டதாரி ஆசிரியர்கள் முதன்முதலாக நியமிக்கப்பட்டனர்.

    இவ்வாறு தொடக்கப்பள்ளிகளில் நியமிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் பள்ளி கல்வித் துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளில் பணியாற்றினால் மட்டுமே முதுகலை ஆசிரியர், உயர் மற்றும் மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், சி.இ.ஓ., வரை பதவி உயர்வு பெற முடியும். இதனால், தொடக்கக் கல்வித்துறை பட்டதாரி ஆசிரியர்கள் பலர், பள்ளிக்கல்வித்துறைக்கு இடமாற்றம் பெற்றனர். ஆனாலும், யூனிட் டிரான்ஸ்பரில் வந்தவர்களுக்கு, புதிதாக பணியில் சேர்ந்த இடத்தில் பழைய சீனியாரிட்டி கணக்கில் கொள்ளப்படாது என்பதால், பதவி உயர்வு கனவு பலிக்காத நிலை ஏற்பட்டுள்ளது.

    இது குறித்து அரசுப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் கூறியது: கடந்த 2004ம் ஆண்டு நடந்த டிஆர்பி தேர்வின்போது, தொடக்கப்பள்ளிக்கா? உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிக்கா? என கூறவில்லை. ஆனால், போட்டித்தேர்வு மூலம் அதிகை ரேங்க் பெற்று தொடக்கப்பள்ளிகளில் பணியில் சேர்ந்த எங்களை காட்டிலும், பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றி வரும், ரேங்க் குறைவாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் சீக்கிரத்தில் பதவி உயர்வு பெற்று விடுகின்றனர். யூனிட் டிரான்ஸ்பரில் செல்லும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மட்டுமே, புதிதாக எந்த இடத்தில் பணியில் சேர்கிறாரோ அந்த இடத்தில் கடைநிலை சீனியாரிட்டியில் வைக்கப்படுவர். அதே விதிகளை பட்டதாரி ஆசிரியர்களுக்கும் பின்பற்றுவது வேதனை அளிக்கிறது. இதனால், யூனிட் டிரான்ஸ்பரில் சென்றுள்ள 4 ஆயிரம் ஆசிரியர்களுக்கும் பதவி உயர்வு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நாங்கள் பணியில் சேர்ந்த தேதியை சீனியாரிட்டியாக கணக்கிட்டு, எங்களுக்கு பதவி உயர்வு வழங்கும் வகையில் விதிகளில் திருத்தம் செய்ய வேண்டும். இவ்வாறு பட்டதாரி ஆசிரியர்கள் கூறினர்.

    4 comments:

    Anonymous said...

    I have been
    appointed as
    B.T.Asst. on July
    2007 at
    Coimbatore
    corporation. My
    TRB Rank no. is
    S001. I got
    transfer to school
    education on sep
    2010. I have lost
    my three years
    seniority.
    But The
    candidates who
    were appointed on
    july 2007 (my date
    of appointment) in
    SSA dept. as BRTE
    didn't lose their
    seniority.
    Eventhough the
    SSA dept differs
    from school
    education dept ,
    the BRTE's are
    eligible for PG
    promotion from
    their first date of
    appointment.
    Except BRTE's all
    other B.T. teachers
    who were
    appointed in other
    dept are losing
    their seniority
    while they are
    coming to school
    education dept.
    Why the govt. is
    partial between
    B.T. teachers and
    BRTE's....?
    What is the use of
    rank no. ?

    Unknown said...

    Above he said that three years lossing. I and most of them appointed 2004-.05. We are lossed 5 years. In my subject after 2005,06 batches and BRTS batches also ready to got PG promotion but what can we do? GOVT only decided our problem please....

    DEVI said...

    தொடக்க பள்ளிகளில் ஒன்றியம் விட்டு ஒன்றியம் மாறினாலே
    ஆசிரியர்களின் பணி மூப்பு பறிபோய் விடுகிறது. இதை யாரும் கேள்விக் கேட்பதில்லை.அதே போல் என்னை விட பட்டதாரி ஆசிரியர் பணியில் 4 ஆண்டுகள் பினனால் சேர்ந்த தொடக்க பள்ளி பட்டதாரி ஆசிரியர் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக உள்ளார். ஆனால் பள்ளிக் கல்வித்துறைக்கு அலகு விட்டு அலகு மாறியவுடன் முதன் முதலில் பணிக்கு சேர்ந்த நாளை சீனியாரிட்டிக்கு கேட்கிறார்கள். இது எந்த விதத்தில் நியாயம். முதலில் பள்ளிக் கல்வி துறையைப் போல் மாநில அளவில் (STATE LEVAL) ஆசிரியர்களின் சீனியாரிட்டி பேணப்பட வேண்டும். இல்லை என்றால் அமைச்சு பணியாளர்களைப் போல் மாநில அளவில்(STATE LEVAL) பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக்கல்விதுறை ஒருங்கினைந்த பட்டதாரிஆசிரியர்களின் சீனியாரிட்டி TRB RANK அடிப்படையில் பேணப்பட்டு நடுனிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு , உதவி தொடக்க கல்வி அலுவலர், உயர் நிலைப் பள்ளி தலை ஆசிரியர் போன்ற பதவி உயர்வுகள் வ்ழங்கலாம். இவ்வாறு வ்ழங்கினால் யாருக்கும் எந்த பிரச்சினை இருக்காது. ஆனால் இதற்கு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் ஒத்துக்கொள்வதில்லை.

    Unknown said...

    STEP MOTHERLY TREATMENT ON ELEMENTARY EDUCATION DEPARTMENT TEACHERS

    1. Request to allot 75% of Block Resource Supervisor Post to Middle School Headmaster/B.T Assistants on promotional basis.

    Scope of Block Resource Centre is all the Elementary, Middle Schools and Classes 6 to 8th of High and Higher Secondary Schools & responsible for conducting various training programs, implementing government Schemes, building construction etc. It may be noted that the ratio of students / teachers belongs to Primary & Middle Schools and Classes 6 – 8th of High and Higher Secondary Schools is approximately 75:25. Since Primary & Middle Schools comprise about 75% and have surplus qualified persons available in elementary education department, why the BRC Supervisor post is to be filled 100% with High School/Higher Secondary BT/PG Assistants alone. More over majority of them, who are promoted as BRC Supervisors are belongs to class 9 and 10th only and not at all connected with elementary educational setup (class 1 to 8th) for which the BRCs are functioning.

    Hence Middle School Headmasters/B.T Assistants are to be considered & need equal proportionate opportunity in the appointment of BRC Supervisor.

    2. Request to promote only AEEO/AAEEO/BRC Supervisors (Promoted from Elementary Education as per the request No. 1) as District Elementary Educational Officers.

    a.At present, DEEOs are promoted from High School Head Masters / Transferred from Head Masters of Higher Secondary Schools. Both the cadres are not from Elementary Education department and may not be familiar with Elementary Educational setup.

    b.It may be noted, all the rules and regulations were framed long back and before creation of Separate directorate for Elementary Education. During and even after creation of separate directorate, there were no qualified persons to get promoted to higher levels. Now the position is not like that & we have surplus qualified persons, similar to High Schools, Viz, BT Assistants / Tamil Pandits, Middle School B.Ed. Grade Head Masters and AEEOs.

    c.When B.T Assistants / Middle School Headmasters are not at all allowed to get Transfers to High / Higher Secondary Schools (with original seniority), why they are freely allowed to get appointed by promotion to our department, for which they are not at all connected.

    d.A B.T Assistant joined in High/Higher Secondary School gets promotion to Head Master of High School/ BRC Supervisor/PG Assistant and then to DEEO/CEO/Joint Director/Director Positions, where as similarly qualified and appointed BT Assistant in the Middle School promotion Opportunities are limited to Middle School Head Master /AAEO alone. This Step-motherly treatment on Elementary Education department by those who are in the rule making place, appointed from High/Higher Secondary Schools is arbitrary and violative of Articles 14 and 16 of our Indian Constitution.

    Considering all these merits, All the DEEO Posts are to be filled only with qualified persons available in the department of Elementary Education.

    This is for published to make awareness among concerned department Teachers and to act.

    R. Selvam, Hosur
    75984 69360