கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் தேர்வை தமிழில் எழுதக்கூடாது என்றும், ஆங்கிலத்தில் மட்டுமே எழுத வேண்டும் என்றும் எந்த உத்தரவும் இதுவரை அரசிடம் இருந்து கல்லூரி கல்வி இயக்குனரகத்திற்கு
வரவில்லை என்று கல்லூரி கல்வி இயக்குனர் பேராசிரியை டி.செந்தமிழ்ச்செல்வி தெரிவித்தார். கலை, அறிவியல் கல்லூரிகள் தமிழ்நாட்டில் சென்னை பல்கலைக்கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், நெல்லை மனோண்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் உள்பட பல்வேறு பல்கலைக்கழகங்கள் உள்ளன.
இந்த பல்கலைக்கழகங்களின் கட்டுப்பாட்டில் கலை அறிவியல் கல்லூரிகள் உள்ளன. மொத்தம் 62 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளும், 133 அரசு உதவி பெறும் கலை, அறிவியல் கல்லூரிகளும், 438 சுயநிதி கலை, அறிவியல் கல்லூரிகளும் உள்ளன. மொத்தத்தில் 633 கலை, அறிவியல் கல்லூரிகள் இருக்கின்றன. இந்த கல்லூரிகள் அனைத்தும் கல்லூரி கல்வி இயக்குனரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. கல்லூரி கல்வி இயக்குனரகம் சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. 633 கலை அறிவியல் கல்லூரிகளில் 3 லட்சத்து 40 ஆயிரம் மாணவ–மாணவிகள் கலை, அறிவியல் படிப்பை படிக்கிறார்கள். ஆங்கில வழியில் தேர்வு இந்த மாணவர்கள் பட்டப்படிப்பை ஆங்கில வழியில் படித்தாலும் தேர்வை ஆங்கில வழியிலும் எழுதலாம். தமிழ் வழியிலும் எழுதலாம் என்ற நடைமுறை இருந்து வருகிறது. ஆனால் ஆங்கில பேச்சாற்றல் இல்லாததால் வேலைவாய்ப்பு குறைவாக உள்ளது.
இதன் காரணமாக ஆங்கில வழியில் மட்டுமே மாணவர்கள் தேர்வை எழுத வேண்டும் என்றும், அவர்களுக்கு கொடுக்கப்படும் அசைன்மென்ட்டையும் ஆங்கிலத்தில்தான் எழுதவேண்டும் என்றும், அதை நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது. இது உண்மையா? என்று தமிழ்நாடு கல்லூரி கல்வி இயக்குனர் பேராசிரியை டி.செந்தமிழ்ச்செல்வியிடம் கேட்டதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:–
அரசு உத்தரவு எதுவும் வரவில்லை கலை, அறிவியல் கல்லூரி மாணவர்கள் தமிழில் தேர்வு எழுதக்கூடாது என்றோ ஆங்கிலத்தில் தான் எழுத வேண்டும் என்றோ இதுவரை கல்லூரி கல்வி இயக்குனரகத்திற்கு அரசிடம் இருந்து உத்தரவு எதுவும் வரவில்லை. ஆங்கில பேச்சாற்றல் இருந்தால் எளிதில் மாணவர்களுக்கு வேலை கிடைக்கிறது என்பது குறித்த கருத்து திட்டக்குழு கூட்டத்தில் பேசப்பட்டது. இவ்வாறு கல்லூரி கல்வி இயக்குனர் டி.செந்தமிழ்ச்செல்வி தெரிவித்தார்.
No comments:
Post a Comment