Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Wednesday, May 15, 2013

    1108 மதிப்பெண்கள் பெற்றும் மேற்படிப்பை தொடர முடியாத மாணவர்

    சிதம்பரத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரின் மகன் பிளஸ் 2 தேர்வில் 1108 மதிப்பெண்கள் பெற்று பொறியியல் துறையில் சேர்ந்து படிக்க விரும்புகிறார். ஆனால் சீட் கிடைத்தாலும் கட்டணம் செலுத்த முடியாத நிலையில் உள்ளார்.
    சிதம்பரம் கோட்டையான்சந்தில் வசிப்பவர் ஆட்டோ ஓட்டுநர் ஏ.கிருஷ்ணமூர்த்தி. தினமும் ஆட்டோ ஓட்டி சம்பாதிக்கும் பணத்தில் தனது மகன் நவீன்குமாரை சிதம்பரம் ராமசாமி செட்டியார் நகர மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படிக்க வைத்தார்.

    நவீóன்குமார் பிளஸ் 2 தேர்வில் 1108 மதிப்பெண்கள் பெற்றார். அவர் பெற்ற மதிப்பெண்கள்: தமிழ்-177, ஆங்கிலம்- 176, இயற்பியல்- 183, வேதியியல்-196, உயிரியல்- 182, கணிதம்- 194. மொத்தம்- 1108.

    இவரது பொறியியல் கட்ஆஃப் 191.75 ஆகும். பி.இ. மெக்கானிக்கல் என்ஜீனியரிங் படிக்க விரும்பும் இம்மாணவருக்கு போதிய பண வசதி இல்லாததால் அண்ணா பல்கலைக்கழக கவுன்சலிங்கில் சீட் கிடைத்தாலும் படிக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. இம்மாணவர் பயில உதவ விரும்புவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: ஏ.கிருஷ்ணமூர்த்தி, 5-18 கோட்டையான்சந்து சிதம்பரம். செல்போன் எண்: 93677 67498.

    No comments: