Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, May 21, 2013

    மருத்துவ படிப்புக்கு 28,300 பேர் விண்ணப்பம்: ஜூன் 6ல் தரவரிசை பட்டியல்

    மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கை கலந்தாய்விற்கு, 28,300 பேர் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பங்கள் பரிசீலனை முடிந்து, அடுத்த மாதம், 6ம் தேதி மதிப்பெண் தர வரிசை பட்டியல் வெளியிடவும், 18ம் தேதி முதற்கட்ட கலந்தாய்வை துவங்கவும் திட்டமிட்டுள்ளதாக மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
    எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., ஆகிய மருத்துவ படிப்புக்கு, 2013 -14 கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு விண்ணப்பங்கள், இம்மாதம், 9ம் தேதி முதல், 18ம் வரை வினியோகிக்கப்பட்டன. மொத்தம், 32 ஆயிரங்கள் விண்ணப்பங்கள் விற்கப்பட்ட நிலையில், 28,300 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

    கடந்தாண்டு, மொத்தம் விற்பனையான, 39 ஆயிரம் விண்ணப்பங்களில், 29 ஆயிரம் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டன என குறிப்பிடத்தக்கது. விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி நாளான நேற்று மாலை, 5 மணிக்குள், தபால் மூலம் விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்கள், இன்று ஏற்றுக் கொள்ளப்படும்.

    No comments: