Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Friday, February 15, 2013

    தாவரவியல் பட்டியல் தயார், எந்நேரமும் வெளியாக வாய்ப்பு! தமிழ் வழி ஒதுக்கீட்டு பட்டியலால் தாமதம் - டி.ஆர்.பி

    தமிழ் வழி ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் தாவரவியல் பாடத்திற்கான முதுகலை ஆசிரியர் பட்டியல் வெளியாவதில் தொடர்ந்து இழுபறி ஏற்பட்டுள்ளது.
    போட்டித் தேர்வு அடிப்படையில், தேர்வு பெற்ற முதுகலை ஆசிரியர் 2,300 பேர், கடந்த டிசம்பரில், பணி நியமன உத்தரவுகளை பெற்றனர். இவர்கள், பணியில் சேர்ந்து, இரண்டு மாதம், சம்பளமும் பெற்றுவிட்டனர். ஆனால், இவர்களுடன் தேர்வெழுதிய தாவரவியல் பாட தேர்வர்களுக்கு, இதுவரை, இறுதிப்பட்டியல் வெளியிடப்படவில்லை.

    தவறுதலான கேள்விகள் விவகாரம் தொடர்பாக, சென்னை, ஐகோர்ட் உத்தரவின்படி, விடைத்தாள்களை மீண்டும் ஒருமுறை ஆய்வு செய்து, இறுதிப் பட்டியல் தயாரிக்கும் பணியில், டி.ஆர்.பி., ஈடுபட்டுள்ளது. 195 பேர் வரை, இந்தப் பாடத்தில் தேர்வு செய்யப்படலாம் என, கூறப்படுகிறது.

    தமிழ்வழி படித்தவர்களுக்கு, 20 சதவீத இட ஒதுக்கீட்டின் அடிப்படையில், 200 இடங்களுக்கான அறிவிப்பும் வெளியாகவில்லை. இதுகுறித்து, டி.ஆர்.பி., வட்டாரங்கள் கூறியதாவது: வரவியல் பட்டியல் தயாராகிவிட்டது; எந்நேரமும் வெளியாக, வாய்ப்பு உள்ளது. ஆனால், தமிழ் வழி ஒதுக்கீட்டு பட்டியல், இன்னும் தயாரிக்கப்படவில்லை.

    முதுகலையில், எந்தெந்த கல்லூரிகளில், எந்தெந்த பாடங்களில், தமிழ் வழிப் பிரிவு உள்ளது என்ற விவரங்களை, பல்கலைகளிடம் கேட்டோம்; இதுவரை பதில் வரவில்லை; பதில் வந்தால் தான், நாங்கள் இறுதிப்பட்டியல் தயாரிக்க முடியும். பொருளியல், வரலாறு மற்றும் வணிகவியல் ஆகிய மூன்று பாடங்களுக்கும் சேர்த்து, 200 இடங்கள் வரை, நிரப்புவதற்கு வாய்ப்புகள் உள்ளன. இவ்வாறு, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன.

    3 comments:

    Anonymous said...

    Whether plant biology and plant biotechnology is equivalent to botany or not? If anybody knows the details of the case please update

    Unknown said...

    which are subject in tamil medium course... if tamil medium unavailable suject how can fill that vacancies by trb pls reply me

    Anonymous said...

    What is the status of botany final list and appoinment?