Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, February 7, 2013

    பிளஸ் 2 தனி தேர்வு: சிறப்பு அனுமதி திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்

    மார்ச்சில் நடக்கும், பிளஸ் 2 பொதுத் தேர்வை, தனி தேர்வாக எழுத விரும்பும் தேர்வர்கள், சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ், இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். தேர்வெழுத விரும்புபவர்கள், www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில், 11ம் தேதி முதல், 13ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
    சிறப்பு அனுமதி கட்டணம், 1,000 ரூபாயுடன் சேர்ந்து, "எச்பி" வகை நேரடி தேர்வர்கள், 187 ரூபாயும், ஒரு பாடத்தை மட்டும் எழுதும், "எச்" வகை தேர்வர்கள், 85 ரூபாயும் செலுத்த வேண்டும்.

    இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட பணசெலுத்துகை சீட்டு மட்டுமே, தேர்வு கட்டணம் செலுத்த பயன்படுத்த வேண்டும். அதில் குறிப்பிட்டுள்ள தொகையை, 14ம் தேதிக்குள், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் எந்தவொரு கிளையிலும், "அரசு தேர்வுகள் இயக்குனர், சென்னை-6" என்ற பெயரில் செலுத்த வேண்டும்.

    இணையதளத்தில் பூர்த்தி செய்து புகைப்படத்துடன் பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பத்தை உரிய இணைப்புகளுடன் தனித்தேர்வர்கள், வரும், 22ம் தேதி மற்றும் 23ம் தேதி, அரசு தேர்வு இயக்குனர் அலுவலகத்தில் நேரடியாக சமர்ப்பித்து, அனுமதி சீட்டை பெற்று கொள்ள வேண்டும்.

    விண்ணப்பத்தில், தாங்கள் கடைசியாக படித்த பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் கையொப்பம் பெற வேண்டும். மேலும் விவரங்களை இணையதளத்தில் இருந்து பெறலாம்.

    No comments: