Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, May 3, 2012

    ஆசிரியர் தகுதித் தேர்வு : சமூக அறிவியல் வினா-விடை5.

    தமிழகத்தில் ஜுன் மாதம் நடைபெற உள்ள ஆசிரியர் தகுதித் தேர்வெழுத உள்ள ஆசிரியர்களுக்கு ஏற்கனவே குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறை வினாக்களை வழங்கியுள்ளோம். அந்த வகையில் தற்போது சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினா விடைகளை தயாரித்து இங்கு வழங்கியுள்ளோம்.
    1. இந்தியாவின் பரப்பளவில் தமிழ்நாட்டின் சதவீதம் - 4 சதவீதம்
    2. இந்திய மாநிலங்களின் பரப்பளவில் தமிழ்நாட்டின் நிலை - 11வது நிலை
    3. தமிழ்நாட்டின் அமைவிடம் -  இந்தியாவின் தென்கோடி
    4. உலகப் புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு நடைபெறும் இடம் - அலங்காநல்லூர்
    5. திருவள்ளுவர் தினம் - தை மாதம் 3ம் நாள்
    6. குழந்தைகள் தினம் - நவம்பர் 14
    7. ஆசிரியர் தினம் - செப்டம்பர் 5
    8. புவி தினம் - ஏப்ரல் 22
    9. மழை நீரைப் போற்றி வழிபடும் விழா - ஆடிப்பெருக்கு
    10. ஆடி மாதம் 18ம் நாள் கொண்டாடப்படுவது - ஆடிப்பெருக்கு
    11. சகோதரத்துவ உணர்வை மேம்படுத்தும் விழா - ரக்ஷா பந்தன்
    12.வண்ணப் பொடிகள் தூவி மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது - ஹோலி
    13. கோதுமை அறுவடைத் திருவிழா - ஹோலி
    14. கோதுமை அறுவடைக் காலம் நடைபெறும் மாதம் - பங்குனி
    15. திருவோணத்தை முன்னிட்டு நடைபெறும் போட்டி - படகுப் போட்டி
    16. பொங்கல் பண்டிகை முன்னிட்டு தமிழகத்தில் நடைபெறும் வீர விளையாட்டு - ஜல்லிக்கட்டு
    17. கேரளாவின் அறுவடைத் திருநாள் - ஓணம் பண்டிகை
    18. மார்கழி மாதத்தின் கடைசி நாள் - போகிப் பண்டிகை
    19. வைகாசி மாதம் பௌர்ணமி நாள் - புத்த பௌர்ணமி
    20. இயேசு கிறிஸ்து பிறந்த தினம் - டிசம்பர் 25
    21. கொடை மடம் என்பது - நினைத்தவுடன், யோசிக்காமல் கொடை வழங்குவது
    22. பாரியின் மகளிர் - அங்கவை, சங்கவை
    23. தமிழ் வரலாற்றில் பொற்காலம் எனப்படுவது - சங்ககாலம்
    24 அதியமானின் அவைப்புலவர் - ஔவையார்
    25. தகடூரை ஆட்சி செய்தவர் - அதியமான்
    26. அதியமான் மீது படையெடுக்க முயற்சி செய்தவர் - தொண்டைமான்
    27. தொண்டைமானிடம் தூது சென்றவர் - ஔவையார்
    28. கடையேழு வள்ளல்களின் சிறப்பை எடுத்துக் கூறுவது - சிறுபாணாற்றுப்படை
    29. முல்லைக்குத் தேர் கொடுத்தவர் - பாரி
    30. மயிலுக்குப் போர்வை வழங்கியவர் - பேகன்
    31.ஔவைக்கு நெல்லிக் கணியை கொடுத்தவர் - அதியமான்
    32. சிவனுக்கு அரிய ஆடை வழங்கியவர் - ஆய் அண்டிரன்
    33. கொல்லிமலை கூத்தர்களுக்கு தன் நாட்டையே பரிசாக வழங்கியவர் - வல்வில் ஓரி
    34. இரவலருக்கு தனது குதிரையையும் நாட்டையும் வழங்கியவர் - திருமுடிக்காரி
    35. காட்டிலும் தன்னை நாடி வந்தவர்களுக்கு உதவியவர் - நல்லியக் கோடன்
    36. மெகஸ்தனிசின் காலம் - கி.பி. 350 - 290
    37. மெகஸ்தனிஸ் எந்த நாட்டை சார்ந்தவர் - கிரேக்க நாடு
    38. மெகஸ்தனிஸ் யாருடைய அரசவைக்கு வந்தார் -சந்திர குப்த மௌரியர்
    39. மெகஸ்தனிஸ் எழுதிய புத்தகம் - இண்டிகா
    40. மெகஸ்தனிஸ் இந்தியாவில் தங்கி இருந்த இடம் - பாடலிபுத்திரம்
    41. மெகஸ்தனிஸ் யாருடைய தூதுவராக இந்தியாவில் இருந்தார் - செல்யூகஸ் நிகேட்டர்
    42. சங்க காலப் பாண்டியரின் ஆட்சிக் காலத்தில் மதுரைக்கு வந்தவர் - மெகஸ்தனிஸ்
    43. பாகியானின் சொந்த நாடு - சீனா
    44. பாகியானின் காலம் - கி.பி. 422 - 437
    45. பாகியான் யாருடைய காலத்தில் இந்தியாவிற்கு வருகை புரிந்தார் - இரண்டாம் சந்திர குப்தர்
    46. மார்க்கோ போலோவின் சொந்த நாடு - இத்தாலி
    47. இபின் பதுதா யாருடைய ஆட்சி காலத்தில் இந்தியாவிற்கு வந்தார் - துக்ளக் வம்ச காலம்
    48. இபின் பதுதாவின் சொந்த நாடு - மொராக்கோ
    49. இந்தியாவிற்கு வந்த முதல் இசுலாமியப் பயணி - இபின் பதுதா
    50. யுவான் சுவாங் கல்வி கற்ற இடம் - நாளந்தா

    No comments: