
கட்டண நிர்ணயம் தொடர்பான மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்த நீதிபதி ரவி ராஜ பாண்டியன் குழு, கடந்த ஆண்டு மே மாதம் புதிய கட்டணத்தை அறிவித்தது. இந்த கட்டணத்தை எதிர்த்து 400க்கும் அதிகமான தனியார் பள்ளிகள், உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தன. அனைத்து
மனுக்கள் மீதும் நீதிபதிகள் ஆர்.பானுமதி , எஸ்.விமலா ஆகியோர் விசாரணை நடத்தினர். வாதங்களை கேட்டு முடித்த நிலையில் மனு தாக்கல் செய்திருந்த தனியார் பள்ளிகள் ம்ட்டும் இந்த ஆண்டு கூடுதல் கட்டணம் வசூலிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். கட்டணம் தொடர்பாக புது மனுக்கள் கட்டண நிர்ணயக் குழுவிடம் அளிக்க தனியார் பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தணிக்கை செய்யப்பட்ட பள்ளிகளின் வரவு செலவு கணக்குகளையும் குழுவிடம் அளிக்கவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளிகள் அளிக்கும் கோரிக்கைகளை பரிசீலிக்க கட்டண நிர்ணயக் குழுவிற்கும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பள்ளிகளின் புதிய மனுக்களையும், வரவு செலவு கணக்குகளையும் கருத்தில் கொண்டு புதிய கட்டணத்தை நிர்ணயிக்க கட்டண நிர்ணயக் குழுவிற்கு நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
No comments:
Post a Comment