கோவை அரசு தொழில்நுட்பக் கல்லுாரியில் நடந்து முடிந்த எம்.பி.ஏ., கலந்தாய்வில், 4,818 பேர் தாங்கள் விரும்பிய கல்லுாரிகளை தேர்வு செய்துள்ளனர்.
தமிழகத்தில், 160 இன்ஜினியரிங் கல்லுாரிகளிலும், 126 கலை அறிவியல் கல்லுாரிகளிலும் அரசு இட ஒதுக்கீடு அடிப்படையில், எம்.சி.ஏ., படிப்புகளை தேர்வு செய்வதற்கான கலந்தாய்வு, கடந்த மாதம், ௨௬ம் தேதி முதல் இம்மாதம், ௧ம் தேதி வரை நடந்தது. இதில், 2,293 பேர் தாங்கள் விரும்பிய கல்லுாரிகளை தேர்வு செய்தனர்; 14 பேர் எந்த கல்லுாரியையும் தேர்வு செய்யவில்லை; 807 பேர் பங்கேற்கவில்லை.
தொடர்ந்து, எம்.பி.ஏ., படிப்புக்கான கலந்தாய்வு, நேற்று வரை நடந்தது. இதில், 256 இன்ஜி., கல்லுாரிகளில், 12 ஆயிரத்து 251 இடங்கள், 91 கலைக் கல்லுாரிகளில், 3,589இடங்கள் என மொத்தம், 15 ஆயிரத்து, 840 இடங்கள் ஒதுக்கப்பட்டன. 7,549 பேர் மட்டுமே விண்ணப்பித்திருந்தனர். நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்கள் போக, 7,280 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இதில், 3,916 பேர் இன்ஜி., கல்லுாரிகள், 902 பேர் கலைக் கல்லுாரிகள் என, 4,818 பேர் விரும்பிய இடங்களை தேர்வு செய்தனர். 2,704 பேர் பங்கேற்கவில்லை; 58 பேர் எந்த கல்லுாரியையும் தேர்வு செய்யவில்லை. எம்.பி.ஏ., படிப்பை பொறுத்தவரை, இவ்வாண்டு, 11 ஆயிரத்து 22 இடங்கள் காலியாக உள்ளன.
கலந்தாய்வு ஒருங்கிணைப்பாளர் விஜயன் கூறுகையில்:
எம்.பி.ஏ., படிப்பை தேர்வு செய்துள்ள, 4,818 பேர் வரும், 20ம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட கல்லுாரிகளில் சேர வேண்டும். இவ்வாண்டு, அரசு இட ஒதுக்கீட்டின் அடிப்படையில், மூன்றில், ஒரு பங்கு மாணவர்கள் மட்டுமே எம்.பி.ஏ., படிப்பை தேர்வு செய்துள்ளனர், என்றார்.
No comments:
Post a Comment