இரண்டு ஆண்டுகளுக்கு பின், 6ம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரை படிக்கும், 14.5 லட்சம் மாணவர்களுக்கு, 60 அம்சங்கள் அடங்கிய, 80 பக்க, 'அட்லஸ்' வழங்கப்பட உள்ளது.
இரண்டு ஆண்டுகள்...
தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், 8, 9 மற்றும் 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, அரசு சார்பில், 2011 முதல், அட்லஸ் என, அழைக்கப்படும் வரைபட புத்தகம் வழங்கப்படுகிறது. முதல் இரண்டு ஆண்டுகள் மட்டும், இந்தப் புத்தகம் வழங்கப்பட்டது; பின் தரப்படவில்லை.
இதுபற்றி விசாரித்தபோது, பல மாநில, மாவட்ட எல்லைகள் மாற்றம்; தெலுங்கானா புதிய மாநில உருவாக்கம் போன்றவற்றால், வரைபடத்தில் மாற்றம் செய்ய வேண்டும் என, மத்திய அரசு உத்தரவிட்டதால், வழங்கப்படவில்லை. தற்போது, இந்திய கணக்கெடுப்பு துறை அளித்த ஒப்புதலின்படி, புதிய அட்லஸ் புத்தகத்தை, தமிழக பள்ளிக்கல்வித் துறை தயாரிக்கிறது.
60 அம்சங்கள்
அதனால், 14.5 லட்சம் மாணவர்களுக்கு, அட்லஸ் வழங்கப்பட உள்ளது. அதாவது, 8, 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுடன் சேர்த்து, இந்த ஆண்டு, 6 மற்றும் 7ம் வகுப்பு மாணவர்களுக்கும், அட்லஸ் வழங்கப்படுகிறது. புத்தகத்தில், 60 அம்சங்கள் பொதுவாக இடம் பெறும். மீதமுள்ள பக்கங்களில், அந்தந்த வகுப்புகளுக்கு ஏற்ப, பாடப்புத்தகத்தில் உள்ள அம்சங்கள் இடம் பெறும்.
அட்லஸ் புத்தகத்தில் இடம் பெறும் அம்சங்கள்:
* சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், கோள்கள், சூரிய ஒளி பூமியில் விழும் நாட்கள், பூமி, அவற்றிலுள்ள அடுக்குகள், எரிமலை, ஏரி, ஆறு, கடல் மற்றும் நீர்நிலைத் தடங்கள் போன்றவை இடம் பெறும் விளக்கப் படம்.
* வரைபடங்களின் வரலாறு, மாறிய வரைபடங்கள், செயற்கைக் கோள் படங்கள்; காலசூழ்நிலை குறித்த படங்கள்.
* தமிழக அரசியல், பண்டைய வரலாறு, புவி அமைப்பியல், மொழி மற்றும் மத ரீதியான மக்கள் தொகை எண்ணிக்கை விகிதம், ஆண், பெண் மற்றும் திருநங்கையர் பாலின விகிதம் கொண்ட படங்கள்.
* அசோகர், குப்தர், ஹர்ஷவர்தன் அரசர்களின் வரலாறு, முகலாய அரசர்கள் காலம், ஆங்கிலேய காலனி ஆதிக்கம், சுதந்திரத்துக்கு முன், பின், மற்றும் தற்போதைய இந்தியா. அரசியல் அளவிலான விவரங்கள்.
* மழை, காற்று, பருவ மாற்றம், பருவ காலங்கள் நிலவரம்.
* விவசாயம் மற்றும் மின்சார உற்பத்தி நிலவரம்.
* உலக நாடுகள், பருவ காலம், உலக நாடுகளின் கொடிகள்.
'புதிய புத்தகம் அச்சிடும் பணி செப்டம்பரில் துவங்குகிறது; அக்டோபர் முதல் வாரத்தில் புத்தகம் வழங்கப்படும்' என, தமிழ்நாடு பாடநுால் மற்றும் கல்வியியல் சேவைப் பணிகள் கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment