Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Friday, December 5, 2014

    வேலூர் மாவட்டம், திமிரி ஒன்றியத்தை சேர்ந்த 34 இடைநிலை ஆசிரியர்கள் (சங்கம் வேறுபாடின்றி) பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை எதிர்த்து தொடர்ந்த மறுசீராய்வு மனுவை ஏற்று 8 வாரத்தில் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

    வேலூர் மாவட்டம், திமிரி ஒன்றியத்தை சேர்ந்த தொடக்கக்கல்வித்துறையின் கீழுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் 34 இடைநிலை ஆசிரியர்கள் தமிழக அரசின் புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை இரத்து செய்ய கோரி வழக்கு(W.P.2470/2013) தொடர்ந்தனர். அவ்வழக்கு நீதியரசர் சந்துரு அவர்கள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது, அதை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து 34 ஆசிரியர்கள் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மறுசீராய்வு மனுவை தாக்கல் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
    அவ்வழக்கு (REV.APPLW.300/2014) இன்று நீதிமன்ற எண்.10 நீதியரசர்.சுந்தரேஷ் அவர்களின் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை ஏற்று கொண்ட நீதிமன்றம் 8 வாரத்தில் பதிலளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    1 comment:

    M.Kamala kannan - gurugulam.com said...

    5% மதிப்பெண் தளர்வில் வெற்றிபெற்றவர்கள் கவனத்திற்கு
    நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,

    TNTET 2013 ஆசிரியர் தகுதி தேர்வில் 5% மதிப்பெண் தளர்வை மக்கள் முதல்வர் அம்மா அவர்கள் அறிவித்தனர். தற்போது மதுரை உயர் நீதிமன்றம் அதற்கான அரசானை GO 25 ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும் 5% மதிப்பெண் தளர்வு குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தற்போது உள்ளது. இந்த நிலையில் நாம் ரத்து செய்வதற்கு முன்னர் 5% மதிப்பெண் தளர்வில் வெற்றி பெற்ற பலர் அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில்
    சேர்ந்துள்ளோம். அதில் பலர் பணி நியமனம் பெற்றுள்ளனர் சிலர் பணிநியமனத்திற்கு காத்திருத்த நேரத்தில் இந்த 5% மதிப்பெண் தளர்வு அரசானை ரத்து செய்யப்பட்டதால் நாம் சேர இருந்த அரசு உதவி பெறும் பள்ளிகளில் தற்போது நம்மை ஆசிரியர்களாக சேர தகுதி இல்லை என கூறி வெளியேற்றும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

    பலர் அரசு உதவி பெறும் பள்ளியில் வேலைக்கு சேரும் நிலையில் இருக்கின்றனர் எனவே இந்த அரசானை ரத்து செய்யப்பட்டாலும் நமக்கு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அளித்துள்ள இந்த சாண்றிதழ் செல்லும் என்று அரசு கருணையுடன் அறிவிக்க அரசிடம் கோரிக்கை வைப்போம்.

    அரசு பள்ளியில் ஆசிரியர் வேலைக்கு அரசு எடுக்கும் முடிவுக்கு கட்டுபடுவோம். தற்போது அரசு உதவி பெறும் பள்ளியில் வேலை கிடைக்க இந்த சான்றிதழ் செல்லுபடியாகும் என அரசு அறிவிக்க மனு அளிப்போம்.மேலும் 5% மதிப்பெண் தளர்வு மூலம் வெற்றிபெற்ற நம்மையும் சேர்த்து இனி வரும் காலிபணியிடங்கள் நிரப்பவும் கோரிக்கை வைப்போம்.

    நண்பர்களே 5% மீண்டும் வேண்டி மக்கள் முதல்வர் அம்மா அவர்களின் வழிகாட்டுதலின் படி செயல்படும் தமிழக அரசுக்கு ஒரு மனுகொடுப்போம் இதற்கு 5% மதிப்பெண் தளர்வில் வெற்றி பெற்றவர்கள் அனைவரையும் மாவட்ட வாரியாக ஒருங்கினைத்து ஒருவர் பொறுப்பேற்று ஒன்று சேர்ந்து மனுக்களில் கையெழுத்துயிட்டு நம்மில் ஒருவர் அந்த மனுவை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களிடம் கொடுப்போம் நம்மீது கருணை கொண்ட மக்கள் அரசு கண்டிப்பாக உறுதியாக நமது கோரிக்கையை ஏற்பார்கள் எனவே ஒன்று சேருங்கள் நமது உரிமைக்காக அமைதியான முறையில் தமிழக அரசை வலியுறுத்துவோம்.

    இப்படிக்ககு
    K.ரஞ்சித்குமார்
    பொள்ளாச்சி கோவை மாவட்டம் 8883161772
    தமிழக TNTET 2013 - 5% மதிப்பெண் தளர்வு மூலம் வெற்றி பெற்ற நண்பர்கள் அமைப்பு பொறுப்பாளர்

    John Shibu Manick நீலகிரி மாவட்டம் 9659340311
    நீலகிரி மாவட்ட ஒருங்கினைப்பாளர்

    மற்ற மாவட்ட நண்பர்கள் எங்களை தொடர்பு கொள்ளவும்