Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Wednesday, December 17, 2014

    உயர்நீதிமன்ற காலிப் பணியிடங்களுக்கு தேர்வானோரின் பட்டியலை வெளியிட்ட டி.என்.பி.எஸ்.சி.


    சென்னை உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள, நேர்முக உதவியாளர், உதவியாளர், கணினி இயக்குபவர் பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியலை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது.


    இதுகுறித்த செய்திக் குறிப்பு: சென்னை உயர்நீதிமன்ற பணிகளில் காலியாக உள்ள, நீதிபதி நேர்முக உதவியாளர் 57; நேர்முக உதவியாளர் 7; உதவியாளர் 37; கணினி இயக்குபவர் 28 மற்றும் தட்டச்சர் 139 என, 268 பணியிடங்களுக்கு, கடந்த பிப்., 23ம் தேதி, டி.என்.பி.எஸ்.சி., தேர்வு நடத்தியது.

    இத்தேர்வில், 27,983 பேர் பங்கேற்றனர். விண்ணப்பதாரர்கள் தேர்வில் பெற்ற மதிப்பெண் மற்றும் இட ஒதுக்கீட்டு விதியின் அடிப்படையில், நீதிபதி நேர்முக உதவியாளர், நேர்முக உதவியாளர் மற்றும் தட்டச்சர் பதவிகளுக்கான, திறனறி தேர்வுக்கு, ஒரு பதவிக்கு, 20 பேர் என்ற விகித அடிப்படையில், 3,631 பேர் அனுமதிக்கப்பட்டனர்.

    இதில், நீதிபதி நேர்முக உதவியாளர், நேர்முக உதவியாளர், உதவியாளர், கணினி இயக்குபவர் பதவிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, மற்றும் நேர்முகத் தேர்வுக்கு அனுமதிக்கப்பட்ட, 221 விண்ணப்பதாரர் பட்டியல் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

    இவர்களுக்கான, சான்றிதழ் சரிபார்ப்பு, வரும் ஜன., 5ம் தேதியும், நேர்காணல், ஜன., 6, 7 மற்றும் 8ம் தேதிகளிலும், தேர்வாணைய அலுவலகத்தில் நடக்கும். தட்டச்சர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் பதிவெண் பட்டியல், பின்னர் வெளியிடப்படும். இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.

    No comments: