Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Friday, December 12, 2014

    ஏழை மாணவர்களுக்கு ஒரு ரூபாய்க்கு டியூசன்: ஆசிரியை கல்விச் சேவை!

    பழங்காலத்தில் குறைந்த செலவில் நிறைய படிக்க முடிந்தது. ஆனால் இன்று கல்வி வியாபாரமாக மாறி ஏழை எளிய மக்களை பயமுறுத்தும் வகையில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. தற் போது பெற்றோர் தங்கள் குழந்தைகளை நல்ல பள்ளி என்று தேடி சேர்ப்பது டன், தனி வகுப்புகளுக்கு (டியூசன்) அனுப்பும் சூழ் நிலை உள்ளது. ஒருவகையில் பார்த்தால் பள்ளிகளுக்கு செலவு செய்யும் பணத்தை விட, டியூசனுக்கு செலவு செய்யும் பணம் தான் அதிகமாக இருக்கிறது.
    இதெல்லாம் வசதி படைத்தவர்களுக்கு மட் டுமே சாத்தியம். போதிய வருமானம் இல்லாத, அடித்தட்டு மக்கள் இது போன்ற டியூசன்களை நினைத்துக் கூட பார்க்க முடியாது.
    இதனால் நன்றாக படிக்கும் ஏழை மாணவர்களும் படிப்பை பாதி யிலேயே நிறுத்தி விட்டு வேலைக்கு செல்லும் நிலை உள்ளது. இது போன்ற மாணவர்களை ஊக்குவிக் கும் விதமாக திருச்சி அருகேயுள்ள அரியமங்கலத்தில் உருவாகியுள்ளது 1 ரூபாய் டியூசன். இந்த டியூசனில் சாதாரண அடிதட்டு மக் களின் குழந்தைகள் படித்து பயன் பெறுவதற்காக ஒரு அமைப்பினர் இதை ஏற்படுத்தி உள்ளனர். இது குறித்து இந்த டியூசன் ஆசி ரியர் கோமதி கூறுகையில்; நான் தற்போது ஈ.வே.ரா கல்லூரியில் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலகத்தில் பணியாற்றி வருகிறேன். நான் தெருவிளக்கில் படி த்து இன்று நல்ல நிலையில் இருக்கிறேன். இதனால் பிற்காலத்தில் ஏழை மாணவர்களுக்கு பாடம் நடத்த வேண்டும் என்று நினைத் தேன். இதையடுத்து திருச்சி ஆர்.சி பள்ளி அருகே உள்ள சமூக பல்நோக்கு மையத்தை அணுகிய போது, அடித்தட்டு மாணவ, மாண விகளை கண்டுபிடித்து அவர்களு க்கு தகுந்த கல்வி அளிக்கும்படி கூறினர்.
    இதையடுத்து எனது ஆசை டியூசன் மூலம் நிறைவேறியது. அரியமங்கலம் சீனிவாச நகர் பகுதியை சுற்றியுள்ள ஏழை மாணவ, மாணவிகளுக்கு நான் டியூசன் எடுக்கத் தொடங்கினேன். இதை ஆரம்பித்தபோது பல எதிர்ப்புகள் இருந்தது. மேலும் டியூசன் நடத்த இடம் இல்லாததால் சாலையோரங்களில் தான் நடத்துவேன். சில தொந்தரவுகளால் 6 இடங்கள் மாறி, தற்போது இங்கு நடத்தி வருகிறேன்.
    எங்கள் டியூசன் 2003ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. தற்போது 5 மையங் கள் இயங்கி வருகி றது. மற்ற மையங்களைவிட இந்த மையத்தில் மாணவ, மாண விகள் அதிகம். இங்கு எல். கே.ஜி., முதல் 12ம் வகுப்பு வரை 70 பேர் படிக்கின்றனர். இதில் மாலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை யும், 7.30 மணியிலிருந்து 9.30 மணிவரை என 2 பிரிவுகளாக வகுப்புகள் நடக் கும். 
    எங்கள் மைய த்திலிருந்து எனக்கு மாதச் சம்பளம் தருகிறார்க ள். இது போக மாணவர்கள் தங்க ளால் முடிந்த ரூ. 1, ரூ.2 என்று கொடுக்கின்றனர்.
    நான் இதை மறுத்தாலும் மாணவ, மாணவிகள் அன்பின் மிகுதி யால் தருகின்றனர். இந்த பணத்தை இந்த இடத்திற் கான மின் கட்டணத்திற்கு பயன்படுத்தி வருகிறேன். என்னிடம் படித்த மாணவ, மாணவிகள் 10ம் வகுப்பில் 455 மதிப்பெண் ணுக்கும் மேல் 5 பேர் எடுத்துள்ள னர். 300 முதல் 400 வரை 50 பேர் எடுத்திருக்கின்றனர் என் றார்.

    No comments: