Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, December 2, 2014

    வெய்ட்டேஜ் தொடர்பான,ஆசிரியர் தகுதிதேர்வு தொடர்பான உங்கள் கோரிக்கையை எங்களிடம் தெரிவிக்கவும்...

    ஆசிரியர் சொந்தங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி.....

    ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிபெற்ற பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் அமைப்பின் நிர்வாகிகள் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களை சந்தித்து பேச வாய்ப்பு தருவதாக முதல்வரின் நேர்முக உதவியாளர் தெரிவித்துள்ளார் ஆகவே இன்று இரவுக்குள் நாங்கள் மாதிரி
    கோரிக்கை மனுவினை பேக்ஸ் மூலம் அனுப்ப வேண்டி உள்ளது...

    ஆகவே போராட்டத்தில் கலந்துகொண்ட மற்றும் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் ஏதேனும் கோரிக்கை தெரிவிப்பதாக இருந்தால் இன்று மாலை உடனடியாக தொலைபேசி மூலமாகவோ மெயிலுக்கு எழுத்து மூலமாகவோ தெரிவிக்கலாம் என அன்போடு கேட்டுக்கொள்கிறோம்...

    இதை படித்துவிட்டு வாட்ஸப், பேஸ்புக்,மற்றும் அனைத்து கல்வி வலைதளங்களிலும் ப் தயவுசெய்து பகிரவும்

    இப்படிக்கு
    செல்லத்துரை மாநிலதலைவர், 98436 33012
    கபிலன் மாநில செயலாளர், 90920 19692
    ராஜலிங்கம் புளியங்குடி மாநில பொருளாளர் 95430 79848


    E.mail- rajalingam.rp@gmail.com

    1 comment:

    Unknown said...

    தமிழக அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கும் மாறுபட்ட மலைப்படியை குறித்து ஒரு கட்டுரை:
    ஒரு அரசு வழங்கும் படிகளை பொறுத்தவரை,அந்த அரசின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு ஒரே மாதிரியாக தான் வழங்க வேண்டும்.ஆனால் மலைப்படிக்கு மட்டும் இடத்திற்கு இடம்,
    ஒன்றியத்திற்கு ஒன்றியம்,மாவட்டத்திற்கு
    மாவட்டம் மாறுவது ஏன்?
    1.தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட
    ஆதிதிராவிடர் நலத்துறை மலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் & பிற ஊழியர்களுக்கு வழங்கும் மலைப்படி ரூ.1500+90=ரூ.1590.
    2. நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை ஒன்றியத்தில் தொடக்க கல்வித் துறை மலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் & பிற ஊழியர்களுக்கு வழங்கும் மலைப்படி ரூ.1500+80=ரூ.1580.
    3.தருமபுரி மாவட்டம் அரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட
    தொடக்ககல்வித்துறை மலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் & பிற ஊழியர்களுக்கு வழங்கும் மலைப்படி ரூ.1500=1500.
    தருமபுரி மாவட்டம் அரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட
    தொடக்ககல்வித்துறை மலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் & பிற ஊழியர்களுக்கு வழங்கும் மலைப்படி விளக்கம்:
    1. 31.05.2009 வரை வழங்கிய மலைப்படி:ரூ.450+45=ரூ.495.
    2. 01.06.2009 முதல் 19.02.2014 வரை வழங்கிய மலைப்படி:ரூ.900+90=ரூ.990.(அ.எண்:236/01.06.2009)
    3. 20.02.2014 முதல் இன்று வரை வழங்கும் மலைப்படி:1500.மட்டும்.
    4. 20.02.2014 ல் தமிழக அரசு வெளியிட்ட அரசாணை எண்:47/20.02.2014 இல் மலைப்பபடியான‌ ரூ.900 என்பது ரூ.1500 ஆக அதிகரிக்கப்பட்டது. இதில் ரூ.90,நீக்க சொல்லி எந்த கருத்து இடம் பெறவில்லை. ஆனால் ரூ.90 ஐ நீக்கி ரூ.1500, மட்டுமே வழங்கப்படுகிறது. இதனை சரி செய்ய உதவுங்கள்,இது சம்மந்தமான வேறு ஏதேனும் அரசாணை இருந்தால் வெளியிடுக.