Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Saturday, December 13, 2014

    ஆசிரியர்கள் ஊதிய உயர்வு: தமிழக அரசு கைவிரிப்பு

    செலவினத்தை காரணம் காட்டி இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்க முடியாது என தமிழக அரசு கைவிரித்து விட்டது. இதனால் ஆசிரியர் சங்கங்கள் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளன.

    தமிழக தொடக்க கல்வித்துறையில் இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.5,200, தர ஊதியம் ரூ.2,800, தனி ஊதியம் ரூ.750 வழங்கப்படுகிறது. மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளி இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.9,300, தர ஊதியம் ரூ.4,200 வழங்கப்படுகிறது. மத்திய அரசு ஆசிரியர்களின் ஊதியத்தை போல் தமிழகத்திலும் வழங்க வேண்டுமென அனைத்து ஆசிரியர்கள் சங்கம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. 'இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு அளிப்பது தொடர்பாக அரசு பரிசீலித்து முடிவெடுக்குமாறு' ஐகோர்ட் உத்தரவிட்டது. 'நாடு முழுவதும் கேந்திரியவித்யாலயா பள்ளியில் 1,017 இடைநிலை ஆசிரியர்கள் மட்டுமே பணிபுரிகின்றனர். ஆனால் தமிழகத்தில் ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 129பேர் பணிபுரிகின்றனர். மத்திய அரசு ஆசிரியர்களை போல் அவர்களுக்கும் ஊதிய உயர்வு அளித்தால் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ரூ.668 கோடி கூடுதல் செலவாகும்.

    இதனால் ஊதிய உயர்வு அளிக்க முடியாது,' என நிதித்துறை செயலர் சண்முகம் அனைத்து ஆசிரியர் சங்கங்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளார். இதனால் அதிருப்தி அடைந்துள்ள ஆசிரியர் சங்கங்கள் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளன.

    4 comments:

    Unknown said...

    sangangal sangamithu uriya poorattathil anaithu aasiriyargalaium onru serthu poradavittal idainilai aasiriyargaluku onrum irathu

    Unknown said...

    S a

    Unknown said...

    Kandipai,tamilaga arasu sambalam uyartha mudiyathu ena kaiyai virithu nam vayitril adithu vittathu!!! Thayavu seidhu periyavargal (mandram,kootani) namakaai,nam urimaikaai "ondrai" poradi urimaiyai petru tharungal.engal vazhvil oli aetrungal ungal kaalil panigirom..plz plz

    subramani said...

    இதற்காக தமிழக அரசின் நிதித்துறை முதன்மை செயலாளர் கே .சண்முகம் அவர்களின் கூற்று கவனிக்க தக்கது ! ஏன் எனில் தமிழக அரசு ஆசிரியர்கள் 16,129 பேர் கிராமத்தில் பணிபுரிவதாகவும் , அங்கு வாழ்க்கை மிகவும் எளியது என்றும் , செலவினகள் குறைவு என்றும் சொல்லியுள்ளார் , இது எப்படி சாத்தியம் என புரியாமல் சொல்லியுள்ளார் ? இப்போ கிராமத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள் நகர் புறத்தில் தான் குடி இருகிறார்கள் , கிராமத்தில் வசித்தல் செலவினம் குறைவு என்றல் , உணவு பொருட்கள் அதுபோல வித்தியாசமாக விற்பனை செய்வது இல்லை ? அதே போல இடை நிலை ஆசிரியர் படிப்புக்கு ஆகும் செலவு கிராமம் /நகரம் என வேறு படுத்தி பார்பதில்லை , என்பதை அவர் கவனிக்க மறந்து விட்டார் !