Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Sunday, December 7, 2014

    "புத்தகத்தின் பின் உள்ள ஒரு மதிப்பெண் வினாக்கள், வரைப்படம், தலைப்பு வினாக்கள் படித்தால்"

    தினமலர் மற்றும் கல்வி மலர் டி.வி.ஆர்., அகாடமி சார்பில், பண்ருட்டியில் நடந்த ஜெயித்துக் காட்டுவோம் கல்வி நிகழ்ச்சியில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது குறித்து மாணவர்களுக்கு பாட வாரியாக ஆசிரியர்கள் ஆலோசனை வழங்கினர்.


    பாலசுப்ரமணியன் (தமிழ்): தமிழ் முதல் தாள், செய்யுள் உரைநடைகளை உள்ளடக்கியது. ஒரு மதிப்பெண் வினாக்கள் செய்யுள் பகுதி பயிற்சியில் இருந்து கேட்கப்படும். இலக்கணப் பகுதிகளை கணிதம் போன்று படித்ததை நன்றாக எழுதிப் பார்த்தால் அதிக மதிப்பெண் பெற முடியும்.

    இரு மதிப்பெண் வினாக்கள் ஏலாதி, திருக்குறள், கம்பராமாயணம், பெரியபுராணம், தமிழ் விடு தூது, தேவாரம், கலித்தொகை அல்லது நந்திகலம்பகம் ஆகியவற்றில் இருந்தும், உரைநடை பகுதியில் பாட எண் 1, 5, 6, 7, 8, 9, 10 பகுதியில் 5 வினாக்கள் கேட்கப்படும். 4 மதிப்பெண் வினாக்கள் சிலப்பதிகாரம், கம்பராமாயணம், சீராப்புராணம், நற்றினை அல்லது புறநானூறு ஆகிய பகுதியில் இருந்து 5 வினாக்கள் கேட்கப்படும்.

    அதில் 3 வினாக்களுக்கு விடை அளித்தால் போதும். உரை நடையில் 2, 3, 4, 5, 6, 8 பாடங்களில் இருந்து வினா கேட்கப்படும். 8 மதிப்பெண் வினா திருக்குறள், சிலப்பதிகாரம் அல்லது கம்பராமாயணம் ஆகியவற்றில் இருந்தும், மனப்பாட பகுதி அனைத்தையும் படிக்க வேண்டும். இரண்டாம் தாளில் பக்கம் 28, 83, 122, 123, 132, 142, 146, 179, 180, 192, 222, 224 ஆகியவற்றை படிக்க வேண்டும். இலக்கணத்தில் அணி, அலக்கீட்டு வாய்ப்பாடு, பா வகை ஆகியவை அவசியம்.

    அனிதா (ஆங்கிலம்): ஆங்கிலம் மிகவும் எளிமையான பாடம். பாடத்தை புரிந்து கொண்டு படிக்க வேண்டும். எந்த அளவுக்கு விடைத்தாள் நேர்த்தியாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு மதிப்பெண் பெறலாம். பொருத்துதல், தமிழாக்கம் செய்தல் ஆகியவற்றிக்கு முக்கியத்துவம் தர வேண்டும். வினாத்தாளில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு தெளிவாக பதில் அளித்தால், ஆங்கிலத்தில் 100 மதிப்பெண்கள் பெறுவது நிச்சயம்.

    வீரப்பன் (கணிதம்): செய்முறை வடிவியல் பகுதியில் தொடுகோடு வரைதல், நாற்கரம் வரைதல் அவசியம். வரைபடம் வரைதலில் இரண்டாம் பகுதியில் உள்ள சிறப்பு வரை படங்கள் 9 கணக்குகள் போட்டு பார்த்தால் போதும். வெண்படத்தில் டி மார்க்கன் விதி, பங்கீட்டு விதி ஆகிய படங்களும், கணக்குகளும் போட்டு பார்த்தால் போதும். சார்புகள் வரைபடம் அதன் கணக்குகள்.

    இயற்கணிதத்தில் காரணிபடுத்துக, வர்க்கம் மூலம், ஆல்பா பீட்டா கணக்குகள், நடைமுறை கணக்குகள் அவசியம். அணிகள் பகுதியில் நிருபிக்க வேண்டிய 6 கணக்குகள் போட்டு பார்க்க வேண்டும். ஆயதொலைவு வடிவியலில் பரப்பளவு, நேர்க்கோட்டின் சமன்பாடு, தேற்றங்களில் தேல்ஸ், கோண இருசம வெட்டி தேற்றங்கள், மருதலையும், பிதாகரஸ் தேற்றம் அவசியம். திட்ட விளக்கம், மாறுப்பாட்டு கெழு, நிகழ்தகவு ஆகியவை அவசியம்.

    அலோசியஸ் (அறிவியல்): இரண்டு மதிப்பெண் வினாக்களுக்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். 2 மதிப்பெண் வினாக்கள் உயிரியலில் இருந்து 14 வினாக்களும், வேதியல், இயற்பியலில் தலா 8 வினாக்கள் கேட்கப்படும். வரைப்படங்களை வரைந்து பயிற்சி செய்ய வேண்டும். அதில் பாகங்கள் குறிப்பது மிக அவசியம். புத்தகத்தின் பின்னால் உள்ள ஒரு மதிப்பெண் வினாக்களை படித்தால் தேர்வில் கூடுதல் மதிப்பெண் பெறலாம்.

    பாலு (சமூக அறிவியல்): புத்தகத்தின் பின்னால் உள்ள ஒரு மதிப்பெண் வினாக்கள், வரைப்படம், தலைப்பு வினாக்கள் படித்தால் அதிக மதிப்பெண் எடுக்கலாம். 2 மதிப்பெண் வினாவில் வரலாற்றில் பாடம் 1 முதல் 5 வரை மூன்று வினாக்களும், 6 முதல் 10 வரை மூன்று வினாக்களும், 11 முதல் 14 வரை இரண்டு வினாக்களும் ஆகியவை புவியியலில் 1, 2, 3, 7 ஆகிய பாடங்களில் இருந்து கேள்வி கேட்கப்படும்.

    தலைப்பு வினாக்கள் பாடம் 1 முதல் 8 வரை இரண்டு வினாக்களும், 9 முதல் 14 இரண்டு வினாக்களும் கேட்கப்படும். 5 மதிப்பெண் வினாக்களுக்கு வரலாற்றில் காரணங்கள், விளைவுகள் போன்ற கேள்விகள் அவசியம். குடிமையியலில் பஞ்சீலம், சார்க், தேர்தல் முறை, நுகர்வோர் உரிமைகள், தமிழ்நாட்டின் மின் சக்தி திட்டங்கள் ஆகியவை அவசியம்.

    புவியியலில் தொலை நுண்ணுணர்வு பாடத்தில் 5 மதிப்பெண் வினா கேட்கப்படும். வரலாற்று வரைப்படத்தில் ஆசியா மற்றும் இந்தியா அவசியம். புவியியல் வரைப்படத்தில் சிகரம், மலைப்பகுதி, ஆறுகள், மண், விளையும் பகுதிகள், முக்கிய இடங்கள் ஆகியவை அவசியம்.

    No comments: