Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Sunday, December 21, 2014

    அப்படி என்னதான் இருக்கிறது பின்லாந்து கல்விமுறையில்?

    பின்லாந்து என்ற நாடு, நோக்கியா அலைபேசிகளின் மூலம் நமக்குஅறிமுகம். நோக்கியா நிறுவனத்தின் தாய்நாடு பின்லாந்து. உலகஅளவில் 'கல்வியின் மெக்கா’ என அழைக்கப்படுவதும் அதே பின்லாந்துதான். அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் பொருளாதாரத்தில்எவ்வளவு மேம்பட்ட நிலையில் இருந்தாலும், அனைத்துபிரச்னைகளையும் தீர்ப்பதற்கான டாலர் என்ற மந்திரித்த தாயத்துவைத்திருந்தாலும், அவர்களால் கல்வியில் பின்லாந்துடன்போட்டிபோட முடியவில்லை.

    'பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான அமைப்பு’ (OCED-organisation for economic co-operation and development) என்பதுவளர்ச்சியடைந்த நாடுகளின் கூட்டமைப்பு. இதன் சார்பில், தங்கள்நாட்டு மாணவர்களின் கல்வித் திறன் குறித்த ஆய்வு அவ்வப்போதுநடைபெறும். இதற்கு PISA-Programme for international students assessment என்று பெயர். மற்ற நாடுகள் விருப்பப்பட்டால், இதில்சேர்ந்துகொள்ளலாம். இந்த ஆய்வில் உலகின் மற்ற நாடுகள்பின்வரிசையில் இருக்க... பின்லாந்து எப்போதும்முன்வரிசையிலேயே இடம் பிடிக்கிறது. அப்படி என்னதான்இருக்கிறது பின்லாந்து கல்விமுறையில்?
    பின்லாந்தில் ஏழு வயதில்தான் ஒரு குழந்தை பள்ளிக்குச் செல்லத்தொடங்குகிறது. ஒன்றரை வயதில் ப்ளே ஸ்கூல், இரண்டரைவயதில்ப்ரீ-கே.ஜி., மூன்று வயதில் எல்.கே.ஜி., நான்கு வயதில்யு.கே.ஜி என்ற சித்ரவதை அங்கே இல்லை. கருவறையில் இருந்துவெளியில் வந்ததுமே குடுகுடுவென ஓடிச்சென்று பள்ளியில்உட்கார்ந்துகொள்ளும் எந்த அவசரமும் அவர்களுக்கு இல்லை. எல்லா நேரமும் கற்றலுக்கான துடிப்புடன் இயங்கும் குழந்தையின்சின்னஞ்சிறு மூளை, தனது சுற்றத்தின் ஒவ்வோர் அசைவில்இருந்தும் ஒவ்வோர் ஒலியில் இருந்தும் கற்கிறது. இலை உதிர்வதும்,செடி துளிர்ப்பதும், இசை ஒலிப்பதும், பறவை பறப்பதும்குழந்தைக்குக் கல்விதான். இவற்றில் இருந்து வேரோடு பிடுங்கிவகுப்பறைக்குள் நடுவதால், அறிவு அதிவேக வளர்ச்சி அடையும் எனஎண்ணுவது மூடநம்பிக்கை.
    ஏழு வயதில் பள்ளிக்குச் செல்லும் பின்லாந்து குழந்தை, அடுத்தமூன்று ஆண்டுகளுக்கு கிட்டத்தட்ட ஆண்டின் பாதி நாட்கள்தான்பள்ளிக்கூடம் செல்கிறது. மீதி நாட்கள் விடுமுறை. ஒவ்வொருநாளும் பள்ளி இயங்கும் நேரமும் குறைவுதான். அந்தநேரத்திலும்கூட, படிப்புக்குக் கொடுக்கப்படும் அதே முக்கியத்துவம்இசை, ஓவியம், விளையாட்டுக்கும் உண்டு. ஒவ்வொரு பள்ளியிலும்ஓர் ஓய்வறை இருக்கும். படிக்கப் பிடிக்கவில்லை அல்லது சோர்வாகஇருக்கிறது என்றால், மாணவர்கள் அங்கு சென்று ஓய்வுஎடுக்கலாம். முக்கியமாக, 13 வயது வரை ரேங்கிங் என்ற தரம்பிரிக்கும் கலாசாரம் கிடையாது; பிராக்ரஸ் ரிப்போர்ட் தந்துபெற்றோரிடம் கையெழுத்து வாங்கி வரச் சொல்லும் வன்முறைகிடையாது. தங்கள் பிள்ளையின் கற்றல் திறன் குறித்துதெரிந்துகொள்ள வேண்டும் என பெற்றோர்கள் விரும்பினால்,தனிப்பட்ட முறையில் விண்ணப்பித்துப் பெற்றுக்கொள்ளலாம்.கற்றலில் போட்டி கிடையாது என்பதால், தேர்வுகளில் அதிகமதிப்பெண் எடுக்கும் டென்ஷன் மாணவர்களுக்கு இல்லை. சகமாணவர்களைப் போட்டியாளர்களாகக் கருதும் மனப்பாங்கும்இல்லை.
    இவர்களுக்கு வீட்டுப்பாடம் தரப்படுவது இல்லை. மாணவர்களுக்குஎந்தப் பாடம் பிடிக்கிறதோ அதில் இருந்து அவர்களே வீட்டுப்பாடம்செய்து வரலாம். ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு மருத்துவர் இருப்பார்.அவர், மாணவர்களின் உடல்நிலையை தனிப்பட்ட முறையில்கவனித்து ஆலோசனைகள் வழங்குவார். ஒரு பள்ளியில்அதிகபட்சமாக 600 மாணவர்கள் இருக்கலாம்; அதற்கு அதிகஎண்ணிக்கை கூடவே கூடாது. முக்கியமாக பின்லாந்தில் தனியார்பள்ளிக்கூடமே கிடையாது. அங்கு கல்வி என்பது முழுக்க முழுக்கஅரசின் வசம். கோடீஸ்வரராக இருந்தாலும், நடுத்தரவர்க்கத்தினராக இருந்தாலும், ஏழையாக இருந்தாலும்...அனைவரின் குழந்தைகளும் ஒரே பள்ளியில்தான் படிக்க வேண்டும். 'என் பொண்ணு இன்டர்நேஷனல் ஸ்கூல்ல படிக்கிறா’ என சீன் போடமுடியாது. அனைவருக்கும் சம தரமுள்ள கல்வி அங்குஉத்தரவாதப்படுத்தப்பட்டுள்ளது. அதனால்தான் பின்லாந்தில் 99சதவிகிதம் குழந்தைகள் ஆரம்பக் கல்வியைப் பெற்றுவிடுகின்றனர்.அதில் 94 சதவிகிதம் பேர் உயர்கல்விக்குச் செல்கின்றனர். 'டியூஷன்’என்ற அருவருப்பான கலாசாரம், அந்த நாட்டுக்கு அறிமுகமேஇல்லை.


    தேர்வுகளை அடிப்படையாகக்கொள்ளாத இந்தக் கல்விமுறையில்பயின்றுவரும் மாணவர்கள்தான், உலகளாவிய அளவில்நடைபெறும் பல்வேறு தேர்வுகளில் முதல் இடங்களைப்பிடிக்கின்றனர். இது எப்படி என்பது கல்வியாளர்களுக்கே புரியாதபுதிர். அந்தப் புதிருக்கான விடையை, ஐ.நா சபையின் ஆய்வு முடிவுஅவிழ்த்தது. உலகிலேயே மகிழ்ச்சியாக இருக்கும் குழந்தைகள்பற்றிய தரவரிசை ஆய்வு ஒன்றை, ஐக்கிய நாடுகள் சபை ஒவ்வோர்ஆண்டும் வெளியிடுகிறது. இதில் பின்லாந்து எப்போதும்முன்னணியில் இருக்கிறது. மகிழ்ச்சியின் நறுமணத்தில் திளைக்கும்குழந்தைகள், அறிவை ஆர்வத்துடன் சுவைப்பதில் புதிர் எதுவும்இல்லை.
    பின்லாந்து கல்விமுறையின் இத்தகைய சிறப்புகள் குறித்துஅறிந்துவருவதற்காக, உலகமெங்கும் உள்ள கல்வியாளர்களும்,பிரதிநிதிகளும் அந்த நாட்டை நோக்கிக் குவிகின்றனர். உலகின் 56நாடுகளில் இருந்து 15,000 பிரதிநிதிகள் ஒவ்வோர் ஆண்டும்செல்கின்றனர். நாட்டின் அந்நியச் செலாவணியில் கணிசமானசதவிகிதம் கல்விச் சுற்றுலாவின் மூலமே வருகிறது. ஆனால், இப்படிதங்களை நோக்கி வீசப்படும் புகழ்மாலைகளை பின்லாந்தின்கல்வியாளர்களும் அமைச்சர்களும் ஓடோடி வந்து ஏந்திக்கொள்வதுஇல்லை. 'பின்லாந்து கல்விமுறைதான் (Finnish Education system)உலகிலேயே சிறந்தது எனச் சொல்ல முடியாது. றிமிஷிகி ஆய்வில்எல்லா நாடுகளும் பங்கேற்காத நிலையில் இப்படி ஒரு முடிவைவந்தடைய முடியாது. எங்களைவிட சிறந்த கல்விமுறையும் இருக்கமுடியும்’ என்கிறார்கள். இல்லாத நாற்காலியைத் தேடி எடுத்து ஏறிஅமர்ந்து, தனக்குத்தானே முடிசூட்டிக்கொள்ளும்தற்பெருமையாளர்கள் நிறைந்த உலகத்தில் இது பண்புமிக்கபார்வை; மதிக்கத்தக்க மனநிலை. கல்வியில் இருந்து நாம்பெறவேண்டிய சாராம்சம் இதுதான்.
    இத்தகைய சிறந்த கல்விமுறையை உருவாக்கியதிலும்,பராமரிப்பதிலும் பின்லாந்தின் ஆசிரியர்களுக்கு முக்கியப் பங்குஉண்டு. சொல்லப்போனால் பின்லாந்து ஆசிரியர்கள்தான் இதற்குமுழுமுதல் காரணம். பின்லாந்தில் ஆசிரியர் பணி என்பது, நம் ஊர்ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் போல மிகுந்த சமூகக் கௌரவம் உடையது.அரசின் கொள்கை வகுக்கும் முடிவுகளில், திட்டங்களின்செயலாக்கத்தில் ஆசிரியர்களுக்கு முக்கியப் பங்கு உண்டு. மூன்றில்ஒரு பின்லாந்து குழந்தைக்கு, ஆசிரியர் ஆவதுதான் தன் வாழ்நாள்லட்சியம். அதேநேரம் அங்கு ஆசிரியர் ஆவது அத்தனை சுலபம்அல்ல!
    மேல்நிலை வகுப்பில் டாப் 10 இடம் பிடிக்கும் மாணவர்களில் இருந்துஆசிரியர் பயிற்சிக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். ஐந்துஆண்டுகள் உண்டு, உறைவிடப் பள்ளிகளில் சேர்ந்து கடும் பயிற்சிஎடுக்க வேண்டும். பிறகு, ஆறு மாத காலம் ராணுவப் பயிற்சி. ஒருவருடத்துக்கு வெவ்வேறு பள்ளிகளில் நேரடியாக வகுப்பறையில்ஆசிரியர் பயிற்சி. ஏதாவது ஒரு பாடத்தில் புராஜெக்ட், குழந்தைஉரிமைப் பயிலரங்கங்களில் பங்கேற்பது, நாட்டின் சட்டத் திட்டங்கள்குறித்த தெளிவுக்காக தேசிய அமைப்புகளிடம் இருந்து சான்றிதழ்,தீயணைப்பு, தற்காப்புப் பயிற்சி, முதலுதவி செய்வதற்கானமருத்துவச் சான்று... என ஆசிரியர் பயிற்சிக்கு சுமார் ஏழுவருடங்களைச் செலவிட வேண்டும். இப்படி ஆசிரியர்களைஉருவாக்கும் விதத்தில் பின்லாந்து மேற்கொள்ளும் சமரசம்இல்லாத முயற்சிகள்தான், அங்கு கல்வியில் மாபெரும்மறுமலர்ச்சியை உருவாக்கி இருக்கிறது!
    -பாடம் படிப்போம்...
    முன்னோடி முயற்சி!
    சில ஆண்டுகளுக்கு முன்பு, திண்டுக்கல் மாவட்ட அரசுப் பள்ளிகளில்படித்த டிஸ்லெக்ஸியா, ஆட்டிசம் உள்ளிட்ட குறைபாடுகள் உடையகுழந்தைகளைக் கண்டறிந்து, அவர்களுக்குச் சிறப்புக் கவனம் தரும்வகையிலான திட்டம் ஒன்று செயல்படுத்தப்பட்டது. மாவட்ட ஆட்சித்தலைவராக வள்ளலார் இருந்தபோது, தேசிய மனநல மற்றும்நரம்பியல் பல்கலைக்கழகத்துடன் (NIMHANS) இணைந்துசெயல்படுத்திய இந்தத் திட்டத்தினால் ஏராளமான குழந்தைகள்இனம் காணப்பட்டனர். இவர்களுக்காக மாவட்ட ஆட்சித் தலைவரின்அலுவலக வளாகத்திலேயே ஒரு சிறப்புப் பள்ளியும் திறக்கப்பட்டது.இங்கு தரப்பட்ட பயிற்சியின்மூலம் கற்றல் திறன் மேம்படுத்தப்பட்டபல குழந்தைகள் வழக்கமான பள்ளிகளுக்குச் செல்லத்தொடங்கியுள்ளனர். தமிழ்நாட்டின் முன்னோடித் திட்டமான இது,இப்போதும் சிறப்பாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது!
    “தாய்மொழி கல்விதான் சிறந்தது!”
    2014-ம் ஆண்டு ஜூன் மாதம் வரையிலும் பின்லாந்தின் கல்விஅமைச்சராக இருந்த ஹென்னா மரியா விர்க்குனன் (Henna maria virkkunen), பின்லாந்தின் கல்விமுறை குறித்து www.hechingerreport.orgஎன்ற கல்வி இணைய இதழுக்கு அளித்த பேட்டியில் இருந்து சிலபகுதிகள்...
    ''பின்லாந்து ஆசிரியர்கள் சிறப்பாகச் செயல்படுவது எப்படி?''
    ''பின்லாந்தில் ஆசிரியர் பணி மிகவும் மதிப்புமிக்க இடத்தில்இருக்கிறது. இளைஞர்கள் ஆசிரியர் ஆவதை தங்கள் லட்சியமாகக்கொண்டுள்ளனர். ஆசிரியர் பயிற்சி படிப்பு, பல்கலைக்கழகத்துடன்இணைக்கப்பட்டுள்ளது. இதனால் அது ஆராய்ச்சி அடிப்படையில்அமைந்துள்ளது. ஆசிரியர்கள் கற்பித்தலில் புதிய உத்திகளைக்கையாளலாம். அதற்கான உரிமை அவர்களுக்கு உண்டு. அதேபோல,எங்கள் கல்விமுறை நம்பிக்கையையும் ஒத்துழைப்பையும்அடிப்படையாகக் கொண்டது. பள்ளிகளில் ஆய்வு நடைபெறும்என்றாலும் அதன் நோக்கம், ஆசிரியர்களைக் கண்காணிப்பது அல்ல;கல்விநிலையை மேம்படுத்துவதாகவே இருக்கும். நாம் எல்லோரும்மனிதர்கள். நம்பிக்கைதான் அடிப்படையாக இருக்க வேண்டும்''
    ''பின்லாந்தில் புலம்பெயர்ந்து வரும் அகதிகளின் குழந்தைகளுக்குஎவ்வாறு போதிக்கப்படுகிறது?''
    ''எங்கள் நாட்டில் அகதிகள் குறைவு. ஹெல்சின்கி (Helsinki) என்றபகுதியில் அதிகபட்சமாக 30 சதவிகித மாணவர்கள்புலம்பெயர்ந்தோர். பலவீனமான கல்வி மற்றும் சமூகப்பின்னணியில் இருந்துவரும் இவர்களை, வழக்கமான பள்ளிகளுக்குஅனுப்பும் முன்பாக, ஒரு வருட காலம் சிறப்புப் பள்ளிகளுக்குஅனுப்பி தயார்படுத்துகிறோம். அதைப்போலவே புலம்பெயர்குழந்தைகளுக்கும் அவர்களின் தாய்மொழியைக் கற்பிப்பதில்முனைப்புடன் இருக்கிறோம். தாய்மொழியைப்பயில்வதன்மூலம்தான் ஒரு குழந்தை உண்மையான கல்வியைப்பெற முடியும். ஹெல்சின்கி பகுதியில்
    44 வேறுபட்ட தாய்மொழிகளைக்கொண்ட புலம்பெயர் குழந்தைகள்படிக்கிறார்கள். அவர்களுக்கு 44 மொழிகளில் கற்பிக்கப்படுகிறது.எங்களுக்கு இது சவாலான வேலைதான். என்றாலும்தாய்மொழியைக் கற்பது மிகவும் அவசியம். தாய்மொழியில் சரியாகஎழுத, பேச, படிக்க, சிந்திக்கக் கற்றுக்கொள்ளும்போதுதான்பின்னிஷ் (Finnish- பின்லாந்து மொழி), ஆங்கிலம் போன்ற மற்றமொழிகளைச் சரியாகப் படிக்க முடியும்!''
    ''பின்லாந்து கல்விமுறையில் இருந்து மற்ற நாடுகள்கற்றுக்கொள்ளவேண்டியது என்ன?''
    ''இது கடினமான கேள்வி. கல்வி என்பது ஒரு நாட்டின் உள்ளூர்மக்களுடனும் வரலாற்றுடனும் இணைந்திருக்கிறது. அதனால் ஒருநாட்டின் கல்விமுறையை இன்னோரு நாட்டுக்குப் பொருத்துவதுசரியாக இருக்காது. ஆனால், மிகச் சிறந்த ஆசிரியர்கள்தான் சிறந்தகல்விக்கான அடிப்படை. ஆசிரியர் பயிற்சியில் முழுக் கவனம்செலுத்தி வடிவமைப்பதும், அவர்களின் பணிபுரியும் சூழலைஆரோக்கியமானதாக மாற்றி அமைப்பதும் முக்கியம். நல்ல ஊதியம்அளிப்பதும் அவசியமானது என்றபோதிலும் அது ஒரு நிபந்தனைஅல்ல. பின்லாந்தில் மற்ற தொழில் துறை பணிகளில் இருப்போர்பெறும் சராசரி ஊதியத்தையே ஆசிரியர்களும் பெறுகின்றனர்!''
    ''பின்லாந்து கல்விமுறை குறித்து அதிகம் அறியப்படாத செய்திகள்எவை?''
    ''எல்லா குழந்தைகளுக்கும் ஒரே மாதிரியான வகுப்பறையில்தான்கற்பிக்கிறோம். நல்ல பள்ளி, புகழ்பெற்ற பள்ளி, மோசமான பள்ளி...என்ற பிரிவினைகள் எங்கள் நாட்டில் இல்லை. கற்றல்குறைபாட்டுடன் இருக்கும் குழந்தைகளிடம் கூடுதல் கவனம்செலுத்துகிறோம். முக்கியமாக, வகுப்பறையில் மாணவர்களின்எண்ணிக்கை அதிகபட்சம் 21 பேர்தான். அதைத் தாண்டினால்ஆசிரியரால் தனிப்பட்ட கவனம் செலுத்த முடியாது. அதேபோலஎங்கள் மாணவர்கள் வகுப்பறையில் இருக்கும் நேரம் மிகவும்குறைவு. ஒரு நாளைக்கு ஏழு மணி நேரம் வகுப்பறையில்இருப்பதாலேயே மாணவர்கள் கற்றுக்கொள்வார்கள் என்பதைநாங்கள் நம்பவில்லை. விளையாடவும், பொழுதுபோக்கவும்,வீட்டுப்பாடம் செய்யவும் அவர்களுக்கு நேரம் தர வேண்டும்!''

    1 comment:

    Unknown said...

    finland follows fantastic educational system.poet Gibran thoughts about children implementation Finland education system.our country pattern of education.....miles to go....
    by,kasiraja.