Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, December 1, 2014

    பொதுத் தேர்வில் மாநில தேர்ச்சியை 95 சதவீதமாக உயர்த்த நடவடிக்கை; அமைச்சர் உத்தரவு


    10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வில், மாணவர்களின் மாநில அளவிலான தேர்ச்சியை 90ல் இருந்து 95 சதவீதமாக அதிகரிக்க, அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். சென்னையில் அமைச்சர் வீரமணி தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடந்தது. முதன்மை செயலர் சபீதா, இயக்குனர் ராமேஸ்வர முருகன், மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
    10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களின் காலாண்டு தேர்ச்சி சதவீதம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மாவட்ட கல்வி அதிகாரி ஒருவர் கூறுகையில், ''அடுத்தாண்டு நடக்கும் 10ம்வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை மாநில அளவில் 90ல் இருந்து 95 ஆக உயர்த்த அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதற்கான பணிகளை மேற்கொள்ள முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது,'' என்றார்.

    No comments: