Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, December 11, 2014

    மின் கட்டணம் 15% உயர்வு: மின்சார ஒழுங்கு முறை ஆணையம் அறிவிப்பு


    தமிழகத்தில் அனைத்து மின் நுகர்வோருக்கும் நாளை முதல் 15 சதவிதம் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது.


     இதுதொடர்பாக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழகத்தில் மின் கட்டணங்களை மாற்றியமைப்பது தொடர்பான உத்தேச கட்டண விபரங்களை கடந்த செப்டம்பர் 23ம் தேதி வெளியிட்டதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த கட்டண மாற்றம் குறித்து, சென்னை, திருநெல்வேலி, ஈரோடு நகரங்களில் கடந்த அக்டோபர் மாதம் பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

             இவற்றை கருத்தில் கொண்டு, மின் கட்டணம் 12ம் தேதி முதல் அதாவது நாளை முதல் நடைமுறைக்கு வரும் வகையில் திருத்தி அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அனைத்து நுகர்வோர் வகையினருக்கும் 15 சதவீத அளவிற்கு மின் கட்டண உயர்வு இருக்கும் என்றும் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது. எனினும், நுகர்வோரை பாதிக்காத வகையில் மானியம் வழங்கப்படும் என ஏற்கனவே தமிழக அரசு அறிவித்திருந்ததது.

    No comments: