Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, December 24, 2013

    தமிழகத்தின் அரசுப்பள்ளிகள் எல்லாம் இன்று அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கும் அவலம்

    ஏதேனும் ஒரு நிராகரிப்பின் வலியோடுதான் கடந்து கொண்டிருக்கிறது ஒவ்வொரு மாணவனின் பள்ளிப் பருவமும், இதற்கு யாரும் விதிவிலக்கல்ல. பல பள்ளிகளில் அடுத்த கல்வி ஆண்டிற்கான சேர்க்கைக்கு முன்பதிவு துவங்கி விட்டது. ஆம், வரும் மே மாதத்தில் வெளியாக உள்ள பொதுத்தேர்வு முடிவுகள் தான், பல பள்ளிகளின் லாப சத வீதத்தை உயர்த்தப்போகின்றன. இப்பொழுதும் கூட இதற்கு மாறான சூழல் உருவாகவில்லை.
    ஒரு அரசு பள்ளியில் நுழைந்தாலே நம்மை மீறிய சோகம்ஆட்கொள்கிறது. மயான அமை தியோடு, மறுத்துப் பேசாத மாண வர்களை உருவாக்கிக் கொண்டு, மதிய உணவோடு கழிகின்றன பள்ளியின் வேலை நாட்கள். தமிழகத்தின் கல்விச் சூழலை மாற்றிய அரசுப்பள்ளிகள் எல்லாம் இன்று அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கும் அவலம் நம் கண் முன்னே நிகழ்கிறது. அனைத்து வசதிகளோடும் அரசுப் பள்ளிகள் இயங்கிக் கொண் டிருந்த நம் தமிழத்தில், இன்றைய நொடியில் அரசுப்பள்ளிகள் என்ற நினைவு வந்தாலே, ஆசிரியர் இல்லை, வகுப்பறை இல்லை, கழிவறை இல்லை என்ற பரிமா ணங்களின் உச்சம் தொட்டு, இன்று அரசுப் பள்ளிகளில் போதிய பயில மாணவர்கள் இல்லை என்ற இலக்கில்லாப் பயணத்தை தொடர்கின்றன.உலக வங்கி கடன் பெற்றுநடத்தப்படும் தேசிய இடைநிலைக் கல்வி திட்டத்தின் சார்பில் 2012-13ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி தமிழகத்தில் 2253 பள்ளிகளில் ஒரு ஆசிரியர் தான் பணியில் உள்ளார். இப்பள்ளிகளில் சுமார் 90,000 மாணவர்கள் பயில் கிறார்கள்.
    அதே போல் 16,420 பள்ளிகளில் இரண்டு ஆசிரியர்கள் மட்டுமே பணி செய்கின்றனர். இதைவிடக் கொடுமை 16 அரசு பள்ளிகளில் ஆசிரியர்களே இல்லை என்பதும், இன்னும் சுமார் 21,000 ஆசிரியர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன என்பதும் தான். பெரும்பாலான அதாவது 75 சதவீதம் அரசுப் பள்ளிகளில் அடிப் படை தேவைகளான சுகாதாரமான குடிநீரோ, கழிப்பறை வசதிகளோ இல்லை. ஆனால் அரசு இவை குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் ஆண்டு தோறும் பல நுhறு பள்ளிகளை பெயரளவில் தரம் உயர்த்திக்கொண்டே இருக் கிறது. தரம் உயர்த்தப்பட்ட பள்ளி களுக்கு அதற்கான கட்டுமான வசதிகளோ, ஆய்வக வசதிகளோ செய்யப்படுவது இல்லை. இந்நிலை யில் தான் 40 சதவீதமான குழந்தைத்தொழிலாளர்கள் தங்களுடைய படிப்பு பாதியில் நின்றதற்கான காரணம் அடிப்படை வசதிகள் இல் லாததுதான் என்ற அதிர்ச்சிகரமான உண்மையை ஒரு ஆய்வு வெளிப் படுத்தி உள்ளது. நாம் வாழுகின்ற இந்த சமூகம் அறிவியலை அடிப்படையாகக் கொண்டது. அது தினந்தோறும் பல்வேறு படிநிலைகளை கடந்து சென்று கொண்டிருக்கின்றது.
    ஆனால் நம் வகுப்பறைகள் மட்டும் அதற்கு நேர் முரணான பாதையிலே பயணித்துக் கொண்டு இருக்கின்றன. இதனை மாணவர்கள் விரும்பும் வகுப்பறையாக மாற்றிட வேண்டிய தேவை உள்ளது. இன்றைய வகுப்பறைகள் மாணவர்களுக்கு மன அழுத்தத்தையும், சோர்வை யும் உருவாக்கிடக்கூடிய இடங் களாகவே உள்ளன.அதே சமயம் நன்னெறிக்கல்வி, உடற்கல்வி, ஆகிய பாடவேளை களைக் கூட மற்ற ஆசிரியர்கள் அபகரித்து பாடமெடுக்கும் மனித உரிமை மீறல் ஒவ்வொரு பள்ளியிலும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இன்னொரு முக்கியமான விசயம், அனைத்துப்பள்ளிகளும், மாணவனின் ஒவ்வொரு வெற் றியையும் தன்னுடையதாக மாற் றிக் கொள்கின்றன. ஆனால் சிறு தோல்வியைக்கூட மாண வனுடையதாக சித்தரிக்கின்றன. இது எவ்வாறு சரியானதாக இருக்க முடியும்? குறிப்பாக தனியார் பள்ளிகள் தங்களுடைய சந்தை லாபத்தை தீர்மானிப்பதில் இவை முன்னிலைப்படுத்துகின்றன.நூலகங்களை மாணவர்களு டையதாக மாற்றிட வேண்டியுள்ளது. பெரும்பாலான பள்ளிகளில் மாணவர்கள் நூலகத்திற்கோ, விளையாடுவதற்கோ அனுமதிக் கப்படுவதில்லை. இன்னொரு சோகம், பல தனியார் பள்ளிகள்நன்றாக படிக்கும் மாணவர்களாக இருப்பவர்கள் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ளக் கூடாது என்ற உத்தரவினை பிறப் பித்துள்ளன.இவற்றையெல்லாம் மாற்றத் துணியாத அரசு நிர்வாகம், தனியார் பள்ளிகள் கொள்ளையடிக்க குழுக்களை நியமித்து கட்டணத்தை நிர்ணயிப்போம் என்று மார்தட் டிக் கொள்கிறது.
    மேலும், தனியார் பள்ளிகளை போல் அரசுப் பள்ளிகளை மாற்றிட ஆங்கில வழிக்கல்வி முறையை அறிமுகப் படுத்துகிறோம் என்னும் அறிவி யலுக்கு எதிரான முடிவை அறிவித் துள்ளது. பள்ளியில் இருந்து இடைநிற்கும் மாணவர்கள் பெரும்பாலானோர் ஆங்கிலம் வராததால் நின்றோம் என்று கூறிய உண்மைகளும் நம் கண் முன்னே உள்ளன.அரசு இயற்றிய சட்டங்களைக் கூட தனியார் பள்ளிகளில் போராடி அமல்படுத்தும் நிலை இங்கு தவிர வேறெங்கும் இல்லை. இப்படியாக இல்லைகளின் கூடாரமாய் மாறிவரும் அரசுப் பள்ளிகளை பாது காத்து, தனியார் பள்ளிகளை முடிவுக்கு கொண்டு வரவேண்டிய அவசியம் உள்ளது.
    இதற்காக அரசுப் பள்ளிகளுக்கு தனியாக நிதி ஒதுக் கீட்டினை அரசு செய்ய முன்வர வேண்டும். தாய் மொழி வழிக்கல்வி-அருகமைப் பள்ளிகள்-அறிவியல் பூர்வமான வகுப்பறை போன்றவை உறுதிப்படுத்தப்பட வேண்டும். இவையெல்லாம் இந்திய மாணவர் சங்கம் தமிழகம் முழுவதும் நடத்திய பள்ளி மாணவர் கோரிக்கை மாநாடு களில் ஒலித்த குரல்கள்.

    எஸ்.கார்த்திக், மாவட்டத் தலைவர், எஸ்எப்ஐ, மதுரை புறநகர் மாவட்டக் குழு,

    No comments: