Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, December 23, 2013

    தொலைதூர, திறந்தநிலை கல்விக்கான யு.ஜி.சி.,யின் புதிய வரைவு விதிமுறை

    தொலைதூரக் கல்வி கவுன்சில் கலைக்கப்பட்ட பின்னர், நாட்டின் உயர்கல்வி நிறுவனங்களால் வழங்கப்படும் தொலைதூரக் கல்வி நடைமுறையை கட்டுப்படுத்த ஒரு வரைவு விதிமுறையை யு.ஜி.சி. உருவாக்கியுள்ளது.


    இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் கூறுவதாவது: 5 ஆண்டுகள் ஸ்பெஷலைஸ்டு துறைகளுக்கான திறந்தவெளி மற்றும் தொலைதூர படிப்புகளை வழங்குவதற்கான அனுமதியை நாட்டின் உயர்கல்வி நிறுவனங்களுக்கு UGC வழங்கும். அங்கீகார காலகட்டத்தின்போது, ஒரு கல்வி நிறுவனத்தின் செயல்பாட்டை ஆய்வு செய்யும் அதிகாரம் UGC -க்கு உண்டு.

    இந்த ஆய்வின்போது, ஒரு கல்வி நிறுவனம் வழங்கிய ஆவணங்கள் உள்ளிட்ட நடைமுறை அம்சங்களில் விதிமுறை மீறல் இருப்பது கண்டறியப்பட்டால், தொலைதூர மற்றும் திறந்தநிலை கல்வியை வழங்கும் அதன் அங்கீகாரம் ரத்து செய்யப்படலாம் மற்றும் தம்மிடம் சேர்க்கைப் பெற்றுள்ள மாணவர்களுக்கு அந்தந்த கல்வி நிறுவனங்களேப் பொறுப்பு.

    தொலைதூர மற்றும் திறந்தநிலை கல்வியை வழங்கும் கல்வி நிறுவனங்கள், தங்களின் வலைதளங்களில், தங்களுக்கான அங்கீகார கடிதங்கள், வழங்கப்படும் படிப்பு விபரங்கள், கட்டணங்கள், படிப்புகளில் சேர்வதற்கான தகுதிகள் உள்ளிட்ட விஷயங்களை வெளியிட்டிருக்க வேண்டும்.

    மேலும், புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு வந்து ஒரு ஆண்டுக்குள், பிரத்யேகமாக, Internal Quality Assurance மையத்தை(CIQA) ஏற்படுத்த வேண்டும். மேலும், தொலைதூர முறையில் வழங்கப்படும் கல்வியின் தரம், நேரடி முறையில் வழங்கப்படும் படிப்பின் தரத்திற்கு சமமான அளவில் இருக்க வேண்டும்.

    இப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அனைத்தும், உயர்கல்வி நிறுவனங்களின் தலைமையகம் மற்றும் அதன் சொந்த பிராந்திய மையங்கள் ஆகியவற்றில் நடைபெற வேண்டும். மற்றபடி, சேர்க்கை செயல்பாடு, எந்தவிதமான கற்றல் மையத்தினாலும், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நடைபெற முடியாது.

    தொலைநிலைக் கல்வி தொடர்பான இந்த புதிய வரைவு விதிமுறை குறித்து, தங்களின் கருத்துக்களை ஜனவரி 3ம் தேதிக்குள் தெரிவிக்க, சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

    No comments: