Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Sunday, September 1, 2013

    ஆறாவது ஊதியக்குழு அமுல்படுத்திய பின்பு தொடக்கக் கல்வி நிலையில் உள்ளஅனைத்து பதவியில் வகிக்கும் ஆசிரியர்களுக்கும் பணப்பயன் இழப்பே.அதிலும் குறிப்பாக இடைநிலை ஆசிரியர்களுக்கு அதிக பாதிப்பு என்பதை ஆராயும் ஓர் கட்டுரை.

    தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியருக்கு இழப்பு யாது?

    1.தற்போது தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருபவர்கள் ,ஏற்கனவே இடைநிலை ஆசிரியர் பதவியில் பணியாற்றிய தேர்வு நிலை பணிக்காலத்தை சேர்த்து தலைமை ஆசிரியர் பதவியில் தேர்வுநிலை பெற்று வந்த உரிமை பாதிக்கப்படுகிறது.இதனால் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியராக பதவியேற்ற நாளில் இருந்து 10 ஆண்டுகள் கழித்தபின்பே அப்பதவியில் தேர்வு நிலை பெற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.


    2. முந்தைய வழகக்த்திலிருந்த ஊதிய ஏற்றமுறையில் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியரின் தேர்வுநிலை ஊதிய விகிதம் முதுநிலைப்,பட்டதாரி ஆசிரியரின் ஊதிய விகிதத்திற்கு ஈடாக (6500-200-10500 என )இருந்தது.ஆனால் தற்போது அப்பதவியில் தேர்வுநிலை வழங்கப்பட்டாலும் அப்பதவிக்குரிய தர ஊதியம் 4800 வழங்கப்படுவதில்லை.

    பட்டதாரி ஆசிரியர்களுக்கு பாதிப்பு யாது?

    1.பட்டதாரி ஆசிரியர்களுக்கு முந்தைய ஊதிய விகிதப்படி,10 ஆண்டுகள்முடித்து தேர்வு நிலை அனுமதிக்கப்பட்டால் அவர்கள் முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் ஊதிய விகிதத்தைப்பெறுவர்.ஆனால் தற்போது தற்போது அப்பதவியில் தேர்வுநிலை வழங்கப்பட்டாலும் அப்பதவிக்குரிய தர ஊதியம் 4800 வழங்கப்படுவதில்லை.

    2. தற்போது பட்டதாரி ஆசிரியர்களாக பதவிஉயர்வினால் பணியாஅற்றும் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள்,தாங்கள் பணியாற்றிய இடைநிலை ஆசிரியரின் தேர்வுநிலைப்பணிக்காலம்மற்ரும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பணிக்காலம் ஆகிய இரண்டும் சேர்த்து 10 ஆண்டுகள் முடிவதற்கு முன்பே பதவி உயர்வினைப்பெற்ற தினால், தன்னைவிட இளையவர்கள்,படித்து பட்டம் பெறாமையால் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியராகவே பணியாற்றிய காரணத்தினால் தர ஊதியம் 5400 பெறும் நிலையை எண்ணியும்,அவர்களைவிட ஒரு சில ஆயிரங்கள் ஊதியம் குரைவாகப் பெறும் நிலையில் பாதிக்கப்பட்டு மன உளைச்சலில் உள்ளனர்

    .

    நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியருக்கு பாதிப்பென்ன?

    நடுநிலைப்பள்ளி தலைமைஆசிரியர் தர ஊதியம் முன்னர் தேர்வுநிலைதொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் இப்பதவிக்கு வந்தமையால்,முதுநிலை ஆசிரியருக்கு இனையான அப்பதவிக்குண்டான ஊதியவிகிதத்தில் அதாவது 6500.200.10500 பெற்றனர்.தற்போது அம்முறை இல்லாமையால் (ஒத்த ஊதிய காலங்களை இணைத்து தேர்வு நிலை வழங்குதல்) நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் ,முதுநிலை ஆசிரியருக்கு இனையான தர ஊதியம் அதாவது 4800 க்கும் கீழாக 4700 பெற முடிகிறது

    2.

    மேலும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பாதிப்பு எனக்குறிப்பிட்ட காரணங்களில் இரண்டாவதாக சொல்லப்பட்ட தர ஊதிய பாதிப்பு பெரும்பாலான நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் பொருந்துகிறது. சில இடங்களில் 4700 தர ஊதியம் பெற்று வரும் . நடுநிலைப்பள்ளி தலைமைஆசிரியரின் கீழ் 5400 தர ஊதியம் பெறும் பட்டதாரி உதவி ஆசிரியர்கள் பணியாற்றும் சூழல் உள்ளது. தன்னைவிட இளையவர்கள், தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியராகவே பணியாற்றி, தாமதமாக பிஎட்அல்லது பிலிட் படித்துபதவிஉயர்வுபெற்ற காரணத்தினால் தர ஊதியம் 5400 பெறும் நிலையை எண்ணியும்,அவர்களைவிட ஒரு சில ஆயிரங்கள் ஊதியம் குறைவாக நடுநிலைப்பள்ளி தலைமைஆசிரியரான பிண்ணும் பெறும் நிலைமையால் பாதிக்கப்பட்டு மன உளைச்சலில் உள்ளனர்

    . இடைநிலை ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை பார்ப்போம்.

    மத்திய அரசுக்கு இணையாக தர ஊதியம் 4200 வழங்கபாடாமை என்பதுடன் தற்போதைய நடைமுறையில்

    இடைநிலை ஆசிரியர்களைப்பொறுத்தவரை

    1 .1.1.06முதல் 31.5.2009 வரை நியமனம் பெற்றோர் பாதிப்பை விட அதற்கு பின்னர்

    2 1.06.2009 க்கு பிறகு நியமனம் பெற்றோர்

    3 1.1.06 முதல் 31.05.2009 வரை தேர்வுநிலை ஊதிய விகிதத்திற்கு இணையான தர ஊதியம் 4300 ல் ஊதிய விகித்தத்தில் ஊதிய நிர்ணயம் பெற்று இடைநிலை ஆசிரியர்களாக தற்போது பணி புரிவோர்.

    என மூன்றுவிதமான பாதிப்பை உடையவர்களாக பிரிக்கலாம்.

    முதலில் மூன்றாமவர் பாதிப்பைப்பார்ப்போம்

    அதாவது இடைநிலை ஆசிரியர் தேர்வுநிலை பதவியானது கடந்த ஊதியக்குழு பரிந்துரைகளில் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவிக்கு இணையான ஊதிய விகிதத்தை கொண்டிருந்த்தது.அதவது தேர்வுநிலை இடைநிலை ஆசிரியரும்,தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியரும் ஒத்த ஊதிய விகிதத்தில் பணியாற்றினர்.

    ஆனால் தற்போது தொடக்கப்பள்ளி தலை ஆசிரியருக்கு தர ஊதியம் 4500 வழங்கப்பட்ட நிலையில் தேர்வுநிலை இடைநிலை ஆசிரியர்களுக்கு தர ஊதியம் 4300 மட்டுமே வழங்கப்படுகிறது.இவ்வாராக தேர்வுநிலை இடைநிலை ஆசிரியர்களுக்கும் இவ்விதியக்குழுவால் பாதிப்பே.

    முதல் இருவர் நிலை மத்திய அரசு ஊதியத்துடன் ஒப்பிட்டால் இடைநிலை ஆசிரியரின் ஒரு மாத இழப்பு

    மத்திய அரசு ஊதியம்

    அடிப்படை ஊதியம் : 9300

    தர ஊதியம் : 4200

    அகவிலைப்படி (80%) : 10800



    மொத்தம் : 24300



    தமிழ்நாடு ஊதியம்

    அடிப்படை ஊதியம் : 5200

    தர ஊதியம் : 2800

    தனி ஊதியம் : 750

    அகவிலைப்படி (80%) : 7000 



    மொத்தம் : 15750 

    ஒரு மாத இழப்பு : 8550/-

    இது இந்த மாதத்தில் பணியில் சேர்ந்தவருக்கான ஒரு மாதிரி கணக்கீடு தான் . பணியில் உள்ளோருக்கு இன்னும் இழப்பு அதிகம்.

    ஆறாவது ஊதியக்குழு ஊதிய விகிதம் 01.6.2009 முதல் இடைநிலை ஆசிரியர்களாக புதியதாக நியமிக்கப்படடவர்களுக்கு, முந்தைய ஊதிய விகிதத்தை ஒப்பிடுகையில் ஊதிய இழப்பே ஓர் ஒப்பீடு

    1.6.2009 தேதியை கொண்டு பழைய ஊதிய விகிதம் மற்றும் புதிய ஊதிய விகிதம் இரண்டையும் ஒப்பிட்டு பார்த்தால் விளங்கும்.

    தற்போது புதிய ஊதிய விகிதத்தினருக்கான D.A. அறிவித்த பின்னர் முந்தைய ஊதிய விகிதத்தில் ஊதியம் பெற்று வருபவர்களுக்காக ஒரு அகவிலைப்படி அரசாணை வெளியிடப்பட்டுவருகிறது. தற்போது 80% - க்கான D.A அரசாணை வெளியிடப்பட்ட பின்னர், முந்தைய ஊதிய விகிதத்தில் ஊதியம் பெற்றுவருபவர்களுக்காக நிதித்துறை அரசாணை 258 நாள்.14.5.2013 இல் D.A. 166% -க்காக வெளியிடப்பட்டுள்ளது. இதனடிப்படையில் ஆறாவது ஊதிய குழு ஊதிய விகிதத்தை விட, முந்தைய ஊதிய விகிதம் (பழைய ஊதிய விகிதம்) நடைமுறையில் இருந்திருந்தாலே ஊதியம் அதிகம் இருந்திருக்கும் என்பதை விளக்கிக்காட்ட விரும்புகிறேன்

    முந்தைய ஊதிய விகிதமே இருந்திருந்தால் பெற்றிருக்கக்கூடிய ஊதியம்:

    BASIC PAY = 4500
    DEARNESS PAY (D.P) = 2250
    D.A. 166% = 11205
    ___________
    TOTAL 17955
    ____________
    (D.A. நிதித்துறை அரசாணை 258 நாள்.14.5.2013 இன் படி)
    ஆறாவது ஊதிய குழு ஊதிய விகிதத்தில் ஊதியம் பெறுபவர்களுக்கு ஏற்பட்டுள்ள ஊதிய இழப்பு.

    BASIC = 5200
    GRADE PAY = 2800
    P.P. = 750
    D.A. 80% = 7000
    _________
    TOTAL 15750
    __________
    ஆறாவது ஊதிய குழு ஊதிய விகிதத்தால் புதிய நியமன இடைநிலை ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள ஊதிய இழப்பு

    17955 - 15750 = 2205

    எளிதில் புரிவதற்காக 1.1.2013 D.A. அரசாணையை வைத்து விளக்கியுள்ளேன். இதே போன்று 2009 முதல் 2012 வரை அறிவிக்கப்பட்ட அகவிலைப்படி அரசாணைகளை வைத்து கணக்கிட்டு பாருங்கள். புதிய ஊதிய விகிததினருக்கு D.A.அரசானை அறிவிக்கப்பட்டு சில வாரங்களில் முந்தைய ஊதிய விகித்தினருக்கும் D.A. அரசாணை வெளியிடப்பட்டு வருகிறது.



    எப்படி நோக்கிலும் ஆசிரியர்கள் பாதிக்கப்படுள்ளனரே.

    கருத்துகள் வரவேற்கப்படுகின்றன

    (rakshith2307@ymail.com)

    அன்புடன் 

    ரக்‌ஷித்

    2 comments:

    Anonymous said...

    அதே போல் மற்றைய துறைகளிலும் ஏற்படும் பாதிப்புகளை வெளியிட்டு ஓற்றுமையை ஏற்படுத்தி நன்மை செய்லாமே தகவல் தொழில் நுட்பவியலர்கள் இன்னும் அதிக பாதிப்பில் உள்ளனர்

    P.NATARAJAN said...

    அதே போல் 01.01.2006 முதல் 31.12.2010 முடிய உள்ள காலத்தில் இடைநிலை ஆசிரியர் பதவியில் இருந்து பட்டதாரியாசிரியராகப் பதவி உயர்வு பெற்றவர்களுக்கு ரூ.750 தனி ஊதியம் எவ்விதத்திலும் கிடைக்காமல் ஏராளமான ஊதிய இழப்பும், முரண்பாடும் ஏற்பட்டுள்ளதே? அதைப் பற்றியும் விளக்கியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்!