கடந்த ஆண்டில் பணி நிரவல் மூலம் மாறுதல் பெற்ற ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு இன்று நடைபெறுவதாக இருந்தது. இதையடுத்து தற்பொழுது நிலையில் காலிப் பணியிடங்கள் ஏதும் இல்லாத காரணத்தாலும், தலைமை ஆசிரியர்கள் கலந்தாய்விற்கு பின் ஏற்படும் காலிப் பணியிடங்களுகேற்ப இன்றைய பணி நிரவல் ஆசிரியர்களுக்கான நடக்கவிருந்த கலந்தாய்வை ரத்து செய்ய தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
ஆகையால் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று இன்றைய பணி நிரவல் ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு ரத்து செய்து பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளதாக தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment