Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Friday, May 17, 2013

    சிவில் சர்வீசஸ் விடைத்தாள்: ஆன்-லைனில் வெளியிட ஆலோசனை

    ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரியாகும் கனவுடன், சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதுபவர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்ற, மத்திய பணியாளர் தேர்வாணையம் தயாராகி வருகிறது. தேர்வில் பங்கேற்பவர்களின் விடைத்தாள்களை, ஆன் லைனில் வெளியிட ஆலோசித்து வருகிறது.
    ஐ.ஏ.எஸ்., மற்றும் ஐ.பி.எஸ்., அதிகாரிகளை தேர்ந்தெடுப்பதற்காக, யு.பி.எஸ்.சி., என்ற மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம், சிவில் சர்வீசஸ் தேர்வுகளை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. இது, முதல் நிலை தேர்வு, பிரதான தேர்வு, நேர்முகத்தேர்வு என, மூன்று நிலைகளை கொண்டது.

    முதல்நிலை தேர்வானது, அப்ஜக்டிவ் முறையிலானது. பிரதான தேர்வு, பாட வாரியாக நடத்தப்படும். இத்தேர்வில் பங்கேற்கும் விண்ணப்பதாரர்கள், தாங்கள் எழுதிய தேர்வின் விடைத்தாள்களை சரிபார்க்கும் வகையில், விடைத்தாள்களை ஸ்கேன் செய்து, ஆன்லைனில் (இணையதளத்தில்) வெளியிட வேண்டும் என, நீண்ட நாட்களாக கோரி வருகின்றனர்.

    குறிப்பாக, முதல் நிலை மற்றும் பிரதான தேர்வுக்கான விடைத்தாள்களை வெளியிட வேண்டும் என, கோரி வந்தனர். சிவில் சர்வீசஸ் தேர்வு விடைத்தாளை விண்ணப்பதாரர்கள் பார்க்கும் வசதி இல்லாமல் இருந்தது. குறிப்பிட்ட காரணங்களுக்காக, விடைத்தாள்களை அளிக்க, கடந்த ஆண்டு முதல் தேர்வாணையம் முன்வந்தது. இருப்பினும், தேர்வு நடைமுறைகள் அனைத்தும் நடந்து முடிந்த பிறகே வழங்கப்பட்டது.

    இந்நிலையில், முதல்கட்டமாக, முதல் நிலை தேர்வுக்கான விடைத்தாள்களை மட்டும்,ஸ்கேன் செய்து இணையதளத்தில் வெளியிடுவது பற்றி தேர்வாணையம் ஆலோசித்து வருகிறது. இதுதொடர்பாக, பல அமைச்சகங்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

    இதற்கு அனுமதி கிடைத்ததும் திட்டம் செயல்படுத்தப்படும். பின், பிரதான தேர்வு விடைத்தாள்களை வெளியிடுவது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக, மத்திய பணியாளர் நல அமைச்சக அதிகாரி ஒருவர் கூறினார்.

    No comments: