Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, May 21, 2013

    இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய நிர்ணயப் பிரச்சினை - ஓர் ஆய்வு

    "தமிழ்நாடு திருத்தப்பட்ட ஊதிய விகிதங்கள் 2009" என்ற பெயரில் தமிழக அரசு வெளியிட்ட ஊதியக்குழு அரசாணையைத் தொடர்ந்து புதிய விகிதத்தில் பதவி உயர்வு ஊதிய நிர்ணயம் செய்வதில் இருக்கும் குழப்பங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறதே தவிர இன்னும் தெளிவு கிடைத்தபாடில்லை. இதனைத் தெளிவிக்கப் பல அரசாணைகளும் பல தெளிவுரைகளும் வெளியானபோதும் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய
    நிர்ணயப் பிரச்சினை - குறிப்பாக 2800 ரூபாய் தர ஊதியம் பெறும் இடைநிலை ஆசிரியர்கள் பதவி உயர்வு பெற்றால் அவரது தனி ஊதியம் ரூ.750 அடிப்படை ஊதியத்துடன் சேர்த்து நிர்ணயம் செய்யப்படும் என்று கூறும் அரசுக் கடிதம் 8764 /சிஎம்பிசி / 2012-1/ 18.04.2012 நிதித் துறை மாதிரிக் கணக்கீடு (illustration) எதையும் இவ்வாணையுடன் இணைக்கவில்லை. பள்ளிக் கல்வித் துறைத் தணிக்கை அலுவலர் (மதுரை மண்டலம்) அவர்கள் உதயசங்கர் என்னும் இடைநிலை ஆசிரியர் பட்டதாரி ஆசிரியராகப் பதவி உயர்வு பெற்ற நேர்வில் எவ்வாறு ஊதிய நிர்ணயம் செய்வது என்பது குறித்து வழங்கிய தெளிவுரையில் 750 தனி ஊதியத்தை அடிப்படை ஊதியத்துடன் சேர்த்துக் கணக்கிட்டுள்ளார். இதை நாம் ஒரு மாதிரிக் கணக்கீடாக எடுத்துக் கொள்வோம். இதிலும்கூட கூட்டல் தவறாக உள்ளது. (படம்)
    தர ஊதியம் ரூ.2800 + தனி ஊதியம் ரூ.750 பெறும் நேர்வில் இதை ஏற்றுக் கொண்டாலும் 01.01.2006 முதல் தர ஊதியம் ரூ.4200 ஆக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தால் கிடைக்கும் பணப்பலனை விடக் கூடுதலாக இது உள்ளதால் மூன்று நபர் கமிட்டியின் பரிந்துரைகளின்படி திருத்தப்பட்ட மறுநிர்ணய அரசாணை வெளியிடும்போது ரூ.2800 தர ஊதியம் பெறும் இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.4200 எனத் திருத்தி வெளியிட்டால் மிகையாகப் பெற்ற ஊதியத்தைத் திருப்பிக் கட்ட வேண்டிய சூழல் உருவாக வாய்ப்புள்ளது.
    கணக்கீடு:
    அடிப்படை ஊதியம் : 14040
    தர ஊதியம் (கருத்தியலாக) : 4200
    மொத்தம் : 18240
    3% பதவி உயர்வு பணப்பலன் : 550
    புதிய நிர்ணயம் : ரூ.14590 + 4600 =19190
    தணிக்கைத் துறையால் வழங்கப்பட்ட விளக்கத்தின்படி நிர்ணயம் செய்தது : ரூ.19910
    அதாவது 4200 தர ஊதியம் இருந்தால் கிடைக்கும் பணப்பலனை விட மாதம் ஒன்றுக்கு ரூ.720 மிகையாக உள்ளது. எதிர்காலத்தில் மொத்தமாகக் கணக்கிட்டு இத்தொகையைத் திருப்பிச் செலுத்த வேண்டும் என உத்தரவு வந்தால் ஏற்கனவே இடைநிலை ஆசிரியர்களின் சம்பளம் குறித்த பிரச்சினையுடன் குழப்பங்களும் மிகும் என்பதே நம் கருத்து.
    அரசுக்குக் கூடுதல் செலவை ஏற்படுத்தும் 2800 தர ஊதியத்தையும் 750 தனி ஊதியத்தையும் இரத்து செய்துவிட்டு 4200 தர ஊதியம் வழங்கினால் போதும். அதுவும் 01.01.2006 முதல் வழங்கப்படும் என அரசு உத்தரவிட்டால் போதும். இப்பிரச்சினைகள் முடிவுக்கு வரும். நம்பிக்கையோடு எதிர்பார்ப்போம் - அரசு விரைந்து வழங்கும் என்று.
    -
    TESTF

    No comments: