தருமபுரி மாவட்டத்தில் அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்டு வரும் 9 தனியார் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரி தெரிவித்தார். இதுகுறித்து அவர் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்டு வரும் தருமபுரி துரைசாமி நாயுடு தெரு, சுதா மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி, அப்பாவு நகர் ஸ்ரீ வித்யாமந்திர் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி, மசூதித் தெரு, ஸ்ரீ ஆனந்தமாருதி மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி, காரிமங்கலம் புனித பால் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி, இண்டூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா வித்யாலயா மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி, காளேகவுண்டனூர் கருணை வீரர் காமராசர் மக்கள் நல வாழ்வுச் சங்க மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி, நார்த்தம்பட்டி நாளந்தா மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி, பாலக்கோடு புனித மேரி ஃபாத்திமா மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி, ஆக்ஸ்ஃபோர்டு மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி ஆகிய பள்ளிகள் ஜூன் மாதம் 1-ஆம் தேதி முதல் செயல்படக் கூடாதென உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்தப் பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்க்க வேண்டாமென பெற்றோர்களுக்குத் அறிவுறுத்தப்படுகிறது. அந்தப் பள்ளியில் உள்ள குழந்தைகளை அருகில் உள்ள அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் சேர்க்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி சம்பந்தப்பட்ட உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள், பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார் அவர்.
No comments:
Post a Comment